ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற கூட்டு எதிக்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்றமைக்காக தம்மை கட்சியிலிருந்து நீக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்…
எம்மை கட்சியிலிருந்து நீக்கினால் நாம் புதிய கட்சியொன்றை அமைத்துக் கொள்வோம் என பாரியளவில் சிலருக்கு பீதி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே எம்மை தொடர்ந்து தாக்கி வருகின்றனர். எனினும் இதனால் நாம் மேலும் மேலும் பிரபல்யம் அடைகின்றோம்.
ஹைட் பார்க் மைதானத்தில் குழுமிய மக்கள் கூட்டத்தைக் கண்டு சிலர் ஊர் ஊராக சென்று எம்மை திட்டித் தீர்க்கின்றனர்.
அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ள தரப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவான குழுவாகும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்குமாறு கடந்த தேர்தலில் கோரியிருந்தார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.