சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தற்போது விடுதலை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்படும் 86 இந்திய மீனவர்களும் நாளை வாகா எல்லைக்குள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இது குறித்து கராச்சி போலீஸ் அதிகாரி ராஜா மும்தாஜ் கூறுகையில், 86 இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்துள்ளோம். மேற்கொண்டு 363 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
முன்னதாக இம்மாதம் 6-ம் தேதி 86 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு கைதியை பாகிஸ்தான் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.