சத்தார் எம் ஜாவித்
மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் ஒன்றை வழங்கவதற்கு இன, மத பேதமின்றி ஒன்றினைந்து உதவுமாறு வேண்டுகோல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்தம் பெருமளவானவர்கள் புற்றுநோய் தாக்கத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கு வருவதாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சுமார் ஆயிரத்தி நூறு (1100) பேர் தங்கி சிகிச்சை பெறுவதாகவும், அதனைவிட நாளாந்தம் சுமார் ஆயிரத்தி ஐநூறு (1500) பேர் வரை சிகிச்சைகளை பெற்றுச் செல்வதற்காக வருகை தருவதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை இலங்கையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு அவதி உறுவதாகவும் தகல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வருபவர்களுக்கு புற்று நோயைக் கண்டறிந்து சிறந்த முறையில் சிகிச்சையளிப்பதற்கு தம்மிடம் தரமான நவீன ரக சி.ரி. ஸ்கேனர் இயந்திரம் இல்லாத காரணத்தால் வைத்தியர்களும் நோயாளர்களும் பாரியளவில் அசௌகரியங்களை எதிர் கொள்வதாக மஹரகம புற்று நோய் வைத்தியசதலையின் சிரேஷ்ட வைத்திய நிபுணரும் ஆலோசகருமான மகேந்திர சோம திலக தெரிவிக்கின்றார்.
மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் மேற்படி இயந்திரம் இல்லாது சுமார் இருபது வருடங்கள் பழைமை வாய்ந்த சாதாரண சி.ரி இயந்திரம் ஒன்றினாலேயே நோயாளிகளின் பரிசோதனைகள் இடம் பெறுவதுடன் அங்கு வரும் நோயாளிகள் தமது சிகிச்சைக்காக ஏக்கத்துடன் காத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மேற்படி இயந்திரம் இல்லாத காரணத்தால் நோயாளிகள் தனியார் வைத்தியசாலைகளில் சென்று ஒரு தரம் ஸ்கேன் பரிசோதனை எடுப்பதற்கு சுமார் ஒன்றரை இலட்சம் வரை கொடுக்க வேண்டியுள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் மிகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர். இலங்கையில் ஒரேயொரு இயந்திரம் மட்டும் ஒரு தனியார் வைத்தியசாலையில் இருப்பதால் அதன் கட்ணம் அதிகமாகக் காணப்படுவதாகவும் நோயாளினளின் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மிகவும் வறுமைக் கோட்டில் உள்ள நோயாளிகள் பண வசதி இல்லாத காரணத்தினால் ஈற்றில் மரணத்தை தழுவ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது புதல்வரும் புற்று நோயால் பீடிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வைத்தியர்கள் தமத வைத்தியசாலைக்கு புதிய நவீன ரக பெற் சி.ரி ஸ்கேனர் தேவை என்ற குறிப்பிட்டுள்ளதைத் தொடர்ந்து தனது கவனம் அதில் அதிகமாக ஏற்பட்டதால் எப்படியாவது ஒரு புதியரக இயந்திரத்தை இந்த வைத்தியசாலைக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று கடந்த இரண்டொரு வருடங்களாக முயற்சி செய்து வருகின்றார் தேசமான்ய எம்.எஸ்.எம்.முஹமுட்.
இந்த வகையில் மஹரகம தேசிய புற்று நோய் நிறுவனத்துடன் தமது கதீஜா நிறுவனமும் இணைந்து புதியரக இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்ய கடந்தசில காலமாக முயற்சித்த அதற்கான திட்டங்களை மேற் கொண்டு பல உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு தனவந்தர்கள். நலன் விரும்பிகள், அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள், அரச நிறவனங்கள் மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தூதரங்கள் மூலம் இதற்கான நிதியைச் சேர்த்து எப்படியாவது ஒரு இயந்திரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் முயற்சிகள் இடம் பெறுகின்றன.
இதன் இறுதிக் கலந்துரையாடல் ஒன்றினை கடந்த சனிக்கிழமை (27) கலதாரி ஹோட்டலில் தேசமான்ய எம்.எஸ்.எம்.முஹமுட் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்படி கலந்துரையாடலில் வைத்திய நிபணர்கள், கல்விமான்கள், பத்தி ஜிவிகள், பல நிறுவனங்களின் தலைவர்கள் என நாற்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமது பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதில் பலரது கருத்தக்களும் உள்வாங்கப்பட்டதுடன் புதிய நவீன ரக சி.ரி ஸ்கேனர் பல விலைகளில் இருந்தாலும் இலங்கைக்கு தேவையானதன் இலங்கை விலை சுமார் இருபது கோடியாகும் (இறுநூறு மில்லியன்) இந்தத்த தொகையை ஒருவராலோ அல்லது ஒலசில அமைப்புக்களாளோ ஈடுசெய்ய முடியாத காரணத்தினால் இன, மத பேதமின்றி அனைவரது பங்களிப்புடன் கொள்வனவு செய்து அன்பளிப்பச் செய்வதற்கு வருகை தந்த எல்லாச் சமுகங்களின் பிரதிநிதிகளும் தெரிவித்து அதனை மேற்கொள்வதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இந்த வகையில் முடியுமான வரையில் நிதி சேகரிக்கும் நோக்குடன் கதீஜா நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் மார்ச் நாலாம் (04) திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த் சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ரூம் ஏயில் நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய எம்.எஸ்.எம்.முஹமுட் தலைமையில் ஆரம்ப நிகழ்வொன்றினை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவு பண உதவியை வழங்கலாம். தற்போதும் அதிகமானவர்கள் உதவி வருகின்றனர். குறிப்பாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையின் வங்கிக்கணக்கில் வைப்புச் செய்வதன் (இலங்கை வங்கி மஹரகம கிளை, கணக்கு இல: 0071275069) மூலம் மேற்படி வேலைத்திட்டத்தின் நோக்கத்தை அடைந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொருவரும் ஒரு முறையாவது நமது உறவுகள் படும் வேதனையின் தாக்கங்களை அங்கு சென்று கண்டு கொண்டால் ஒவ்வொருவரதும் மன நிலை அவர்களுக்கு ஏதாவது ஒர வகையில் உதவுவதற்கு இறைவன் உதவி செய்வான். அந்தளவிற்கு புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் ஒவ்வொருவரும் மரணத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்று கொண்டிருக்கின்றனர். இறைவன் அவர்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் வேண்டிக் கொள்ள வேண்டிய விடயமாகும்.
எனவே மேற்படி விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் பங்களிப்புச் செய்தால் புதிய இயந்திரத்தைப் பெற்று அதன் மூலம் ஆரம்பத்திலேயே நோயின் தாக்கத்தைக் கண்டுபிடித்து பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என வைத்திய நிபணர்கள் தெரிவிக்கின்றனர்.
Full details of Bank Account Nos.
Acct, No: 0071275069
Bank: Bank of Ceylon
Swift Code: BCEYLKLX
Branch Code: 055 Maharagama
Banks Code: 7010 Account
Name: National Cancer Institute