ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விஜயம் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் இடம் பெறலாம் எனவும் தெரியவருகின்றது.
உலகின் பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள பாரிஸ் பிரகடனத்தில் ஜனாதிபதி கைச்சாத்திட உள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் இந்த அமெரிக்க விஜயம் தொடர்பில் உறுதியான திகதிகள் மற்றும் ஏனைய விபரங்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.