பி.எம்.எம்.எ.காதர்
இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தலையீடுகள் இல்லாம் நீதிமன்றங்களும்,நீதிபதிகளும் சுயாதீனமாக இயங்குகின்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் டாக்டர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் டாக்டர் விஜயதாஸ ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வியாழக்கிமை(03-03-2016)கல்முனை நீதிமன்றத் தொகுதிக்கு வருகைதந்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிப்பார்வையிட்ட பின்னர் சட்டத்ரணிகள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எப்.எம்.அமீருள்; அன்ஸார் மௌலானா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது :- கடந்த கால ஆட்சிச்காலத்தில் நடைபெற்றதைப் போல் அல்லாது இன்றைய நல்லாட்சியில் எல்லா நடவடிக்கைகளும் சுயாதினமாகவே நடைபெறுகிறது.
நீதிமன்றங்களைப் பார்கின்ற போது கல்முகை நீதிமன்ற வளாகம் சிறப்பாக இயங்குவதை அவதானிக்க முடிகின்றது அதே போன்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கமும் நல்ல முறையில் இயங்குவதையும் காணமுடிகின்றது.
மேலும் கல்முனையில் சகல வசதிகளையும் கொண்ட நீதிமன்றக் கட்டத் தொகு அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க,நீதி அமைச்சின் செயலாளர் ஜயமன்ன,கல்மனை மாவட்ட நீதிபதி ரமனா கமலன்,நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பையஸ் றஸாக் மற்றும் சட்டத்தரணிகளும,அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.