இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து தமது நாடு அறிந்துள்ளதாகவும் உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும் சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் சுவிட்ஸர்லாந்தின் வெளியுறவுத்துறை பிராந்திய சபை உறுப்பினர் டிட்டியர் பேர்க்கோல்டருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது இரண்டு அமைச்சர்களும் அரசியல் தொடர்பான கலந்துரையாடல்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
அத்துடன் குடிப்பெயர்வு தொடர்பில் பங்களாளித்துவத்துக்கும் இரண்டு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.