சாஹிராவில் அடுத்த மைதான நிகழ்வு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மைதானத்திலேயே இடம்பெறும் !

எம்.வை.அமீர் 

 

  சாஹிராவில் நான் கல்வி கற்ற காலத்துக்கு முன்பிருந்தே இந்த மைதானம் அபிவிருத்தி காணாத நிலையிலேயே காணப்படுகின்றது. தற்போது நான் விளையாடுத்துறைப் பிரதி அமைச்சராக பொறுப்பேற்ற காலமுதல், இப்பிராந்திய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அந்த வரிசையில் கல்முனை சாஹிராவின் விளையாட்டு மைதானத்தை அபிவிருத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் கூடிய விரைவில் இம்மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டதன் பின்னரே அடுத்த நிகழ்வு இம்மைதானத்தில் இடம்பெறும் என்று திகாமடுல்ல பாராளமன்ற உறுப்பினரும் விளையாடுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 

unnamed_Fotor

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 2016-03-01 ஆம் திகதி இடம்பெற்ற இல்ல விளையாட்டு பேட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிபர் பீ.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.ஏ.ஜலீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.றகுமான், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என்.ஆரிப் உள்ளிட்ட பாடசாலைஅதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர், சர்வதேச மட்டத்தில் விளையாட்டுத்துறையில் தங்கப்பதக்கங்களை பெறும் சாதனையாளர்களைக் கொண்டுள்ள எங்களது பிரதேசங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள், அபிவிருத்திகாணாது உள்ளது பெரும் குறையாகும். இவற்றை நிவர்த்திக்க தன்னாலான அனைத்து முயச்சிகளையும் செய்து வருவதாகவும் இதில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை புனர்நிர்மாணம் செய்யவுள்ளதாகவும் அதனோடு இணைந்ததாக வடிகான் மற்றும் வீதி வசதிகளையும் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளுக்கு பாடசாலை நிர்வாகத்தினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டதுடன் பொன்னாடையும் அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இதன்போது  மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள், அஞ்சலோட்டப் போட்டிகள், மாணவர்களின் அணி வகுப்பு மற்றும் கராட்தே உடற்பயிற்சி நிகழ்சிகளும் இடம்பெற்றன.
நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 222 புள்ளிகளைப் பெற்று ஹிறா இல்லம் இவ்வருடத்திற்கான சம்பியனானது. 219 புள்ளிகளைப் பெற்று சபா இல்லம் இரண்டாம் இடத்தையும், 214 புள்ளிகளைப் பெற்று அறபா இல்லம் மூன்றாம் இடத்தையும் 213 புள்ளிகளைப் பெற்று மர்வா இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றன.

பணப்பை ஒன்றினை கண்டெடுத்து அதனை உரிய நபரிடம் ஒப்படைத்த மாணவர் ஒருவருக்கு விசேட பரிசும் பாராட்டும் இந்நிகழ்வின்போது வழங்கப்பட்டது.

இறுதியாக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்களை பிரதி அமைச்சர் ஹரீஸ் உள்ளிட்டஅதிதிகளால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.