அத்துடன் பசில் ராஜபக்ச, நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 70 வீதத்தை சுரண்டி சாப்பிட்டவர் எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு மக்கள் ஜனவரி 8 ஆம் திகதி குடும்பவாதத்தை தோற்கடித்தனர். பசில் மீண்டும் குடும்ப அரசியலை கட்டியெழுப்ப முயற்சிக்கின்றார்.
நக்சலைட் சதித்திட்டம் எனக் கூறி, பசில் ராஜபக்ச அன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக்கொடுத்தார். பசில் என்பவர் கட்சியை தொடங்கியவரோ கட்சியை வெற்றி பெற செய்தவரோ அல்ல. அவர் கட்சியை உடைத்து, கட்சியை தோல்விக்கு இட்டுச் சென்றவர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மகிந்தானந்த விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தாலும் அமைச்சை நாமல் ராஜபக்சவே தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
வனவிலங்கு அமைச்சராக நான் பதவி வகித்த போது, யானைகளுக்காக வேலி அமைக்க உலக வங்கி வழங்கிய பணம் எனது அமைச்சுக்கு வழங்கப்படாமல், அது பசில் ராஜபக்சவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டது எனவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.