அல் கய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒஸாமா பின் லேடன், ஜியாதிய போராட்டத்திற்காக தனது சொத்துக்களை உயிலாக எழுதி வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
பின் லேடனின் 29 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு உயிலாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை அமெரிக்க ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
அல்லாவின் பெயரினால் தமது சொத்துக்களை ஜிஹாத் போராட்டத்திற்கு பயன்படுத்துமாறு பின் லேடன், தனது உயிலில் குடும்ப உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.
எவ்வாறெனினும் இந்த சொத்துக்கள் ரொக்கமா அல்லது வேறும் வகையிலான சொத்துக்களா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.
அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் பின் லேடன் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.