அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, பாரிய பேரழிவையேற்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் அதன் மூலம் மனித குலத்தை காப்பாற்ற முன்வரவேண்டும் என அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன் எழுதிய கடிதத்தை அமெரிக்க ஒபாமா நிர்வாகம் பகிரங்கப்படுத்தியுள்ளது.
ஓசாமா பின் லாடன் பாக்கிஸ்தானிலுள்ள தனது மறைவிடத்தில் வைத்து மே2 2011 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட வேளை அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இறுதி தொகுதியை ஓபாமா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதில் கையெழுத்திடப்படாத ,திகதி குறிப்பிடப்படாத கடிதமொன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மக்களிற்கான குறிப்பிட்ட கடிதத்திலேயே ஓபாமாவின் காலநிலை மாற்றம் பற்றிய கவலைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பிட்ட கடிதம் பராக்ஓபாமா முதல்தடைவ ஜனாதிபதியாக பதவியேற்ற சில காலத்திற்கு பின்னர் எழுதப்பட்டுள்ளது போல தோன்றுவதாக புலானய்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட கடிதத்தில் பின்லாடன் 2007-2008 அமெரிக்க நிதி நெருக்கடிக்கு மூலதனமும், அதிகாரவர்க்கமும் பெரும்நிறுவனங்களின் கரங்களில் இருப்பதும், ஈராக் மற்றும் ஆப்கானில் அமெரிக்க ஆரம்பித்துள்ள யுத்தங்களுமே காரணம் என தெரிவித்துள்ளார். இந்த சக்திகளின் பிடியிலிருந்து அமெரிக்காவை விடுவிப்பதற்காக அமெரிக்கர்களை கிளர்ந்தெழுமாறும் அவர் அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.