ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இனிமேல் பொதுக் கூட்டங்களை நடத்தினால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கப்பாட்டுடன் நடத்த வேண்டுமென அக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் வாதிகள் தனித்தனியாக அக் கூட்டங்களில் கலந்து கொள்வது முறையற்றதெனவும் கட்சியின் இணக்கப்பாட்டுடனும் கட்சிக்கு அறிவித்து விட்டும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குருணாகலையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எந்தவொரு பொதுக்கூட்டமும் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் அனுமதியின்றி நடத்தப்படமாட்டாதென தெரிய வருகின்றது.