செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கியூரியோசிற்றி விண்கலமானது அந்தக் கிரகத்திலான சூரிய அஸ்தமனம் தொடர்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் ஆரம்பத்தில் கறுப்பு வெள்ளை நிறத்திலேயே பூமிக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில் கோள் மண்டல சபையை சேர்ந்த நிபுணர்கள் இந்த புகைப்படங்களை உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வர்ண புகைப்படங்களாக மீள உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.