பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் ஐந்து நாட்களுக்கு போதுமான 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருட்களே கையிருப்பில் உள்ளதாகவும் ஐந்து நாட்களின் பின்னர் பாரிய எரிபொருள் தட்டுப்பாடொன்று ஏற்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி முதல் எரிபொருட்களின் விலையினை குறைத்ததனையடுத்து தொடர்ச்சியாக நட்டம் ஏற்பட்டதாகவும் அதனடிப்படையில் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 6 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நா.ௌான்றுக்கு இரண்டாயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் விற்பனை செய்யப்படுகிற அதேவேளை, தற்போது 10ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளே கையிருப்பில் உள்ளது தற்போது எரிபொருள் கொள்வனவிற்கு போதிய அளவு நிதி வசதிகள் இல்லையெனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் சிலர் எரிபொருளின் விலையினை உயர்த்துவதற்காக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட போவதாக போலி பிரசாரம் செய்து வருவதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.