அக்கரைப்பற்று வெள்ளப் பாதுகாப்பு வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வினியோக தொட்டிகள் தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினால் பாதைக்கு பொருத்தமற்ற ரீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந் நீர் வினியோக தொட்டிகளினால் பயணிகள் பல இடர்பாடுகளையும் விபத்துக்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தோறும் பயன்படுத்தும் இப்பாதையில் அபாயகரமாக அமைக்கப்பட்டிருக்கும் நீர் வினியோக தொட்டிகளை உரிய முறையில் பாதைக்கு பொருத்தமாக சீரமைக்குமாறு பல வருடங்களாக பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை அதிகாரிகளினால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக பாதைக்கு பொருத்தமற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்தாங்கிளை சீரமைத்து தருமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆர்வலர், அக்கரைப்பற்று சீனி முகம்மட் இத்ரிஸ் பிரதேச மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் இந் நீர்தாங்கிகள் தொடர்பில் கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்திற்கு சென்று முறைபாட்டை பதிவு செய்துள்ளார்.
இம்முறைப்பாடானது தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகிய நிர்வாக அலகுகளுக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது.
இம்முறைப்பாடானது தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகிய நிர்வாக அலகுகளுக்கு எதிராக செய்யப்பட்டுள்ளது.
ஏ.எல். ஆஸாத்
சட்டக்கல்லூரி
சட்டக்கல்லூரி