கொழும்பு சினமன் கிரேண்ட் ஹொட்டலில் இன்று நடைபெற்ற ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, மொண்டிநீக்ரோ, லெபனான், நேபாளம், மாலைதீவு, மொங்கோலியா உட்பட 26 நாடுகளின் அரசியல்வாதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆசிய பசுபிக் ஜனநாயக சங்கத்தின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்த முதல் நாடு இலங்கையாகும்.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் பிரதான கட்சி ஒன்றின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றதன் மூலம் நாட்டின் நல்லாட்சி ஏற்பட்டது.
இந்த புதிய பயணத்தை மேற்கொள்ள பல்வேறு சமய அமைப்புகள், சிவில் அமைப்புகள் உட்பட பல தரப்பினர் எம்முடன் இணைந்து கொண்டனர்.
இதில் கிடைத்த முன்னேற்றத்தின் பின்னர், இலங்கை தற்போது நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இலங்கை தற்போது வரலாற்று தடம் பதிக்கும் இடத்திற்கு வந்துள்ளது. அரசாங்கம் நல்லாட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.