அனுமதியின்றி பஸ் ஒன்று போக்குவரத்தில் ஈடுபட்டால் அதற்கான அபராதமாக தற்போது 10000 ரூபா அறவீடு செய்யப்படுகின்றது.
நாட்டில் மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பல வாகனங்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிப்பத்திரம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
தரமான போக்குவரத்து சேவையொன்றை வழங்க சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 1991ம் ஆண்டு 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 40(இ) சரத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த யோசனை குறித்த அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் முறையான அனுமதிப்பத்திரமின்றி பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.