றியாஸ் இஸ்மாயில்
இலங்கை பிரஜைகள் ஆலோசனைக்குவின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசல் அனுசரனையுடன் அடடாளைச்சேனையில் ஜனாஸா நலன்புரி செயற்திட்டம் நேற்று மாலை அட்டாளைச்சேனையில் ஆரம்பம் செய்யப்பட்டது.
ஜனாஸா நலன்புரி செயற்திட்ட அமைப்பின் தலைவர்
எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும்,பிரஜைகள் ஆலோசனைக் குழுவின் தலைவரும்,ஜனாஸா நலன்புரி செயற்திட்ட அமைப்பின் ஸ்தாபக தலைவருமான எஸ்.எல்.எம்.பளீல்(பீ.ஏ),ஜும் ஆப் பள்ளிவாயல் தலைவரும்,தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.அனீஸ்,ஜனாஸா நலன்புரி செயற்திட்ட அமைப்பின் பொருலாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான ஐ.எல்.ஏ.முனாப், உட்பட அதிபர்கள் பள்ளி வாயல் நிருவாகத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனார் .
இப்பிரதேசத்தில் யாரும் நினைத்துப் பார்க்காமல் இருந்தஜனாஸா நலன்புரி செயற்திட்ட அமைப்பினை முதல் தடவையாக தான் முன்வந்து செய்வதற்கு பல முயற்சிகளை மேற் கொண்ட பளீல் அவர்களுக்கும் இவ் அமைப்பின் சகல உறுப்பினர்களுக்கும் இதன் போது பலர் நன்றிகளை தெரிவித்தனர்.
ஜனாஸா பற்றி பின்வருவோர்களுக்கு அறிவிக்கும் போது உடனடியாக ஜனாஸாவுக்குரிய பொருட்கள் இலவசமாக குறிப்பிட்ட இடத்திற்கு வந்து ஒப்படைக்கப்படும்
எஸ்.எல்.எம்.பளீல் -0774237236 எம்.ஏ.சீ.எம்.றியாஸ்-0770034600
ஐ.எல்.ஏ.முனாப் 0757109022 என்.நுாருல்ஹக் -0772267388
ஏ.எல்.பாயிஸ் -0770258600 எச்.எம்.மக்கீன்-0754562630
எஸ்.ஏ.ஜப்பார்-0776685670 ஏ.எஸ்.ஜாபீர்-0772010929
இவர்களை தொடர்பு கொள்ளுமாறு இதன் போது அறிவிக்கப்பட்டன.