பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக போட்டியிட்ட இலங்கை வம்சாவழியினரான ரணில் ஜயவர்தன பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
வடகிழக்கு ஹம்ஷயர் தொகுதியிலிருந்து அவர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.
ரணில் ஜயவர்தன 35 ,573 வாக்குகளை பெற்றுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அவர் இலங்கையிலும் அரசியல் உரித்துடைய பரம்பரையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் ஜயவர்தனவின் பூட்டன் ஒருவர் முன்னைய கிராம சபையின் அங்கத்தவராக முதல்முறையாக இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவம் வகித்துள்ளதாக அவரின் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவரது உறவினர்கள் இலங்கையின் செயற்பாட்டு அரசியலுடன் இப்போது கூட ஈடுபட்டு வருகின்றனர்.
பத்தேகம முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராகவும், பத்தேகம பிரதேச சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ள ஆனந்த லெனரோல், ரணில் ஜயவர்தனவின் நெருங்கிய உறவினராகும்.