குற்றம் இழைத்திருந்தால் கைது செய்யவும் : உடுவே தம்மாலோக்க தேரர் !

Uduwe_Ele

 

குற்றம் இழைத்திருந்தால் கைது செய்யுமாறு உடுவே தம்மாலோக்க தேரர் கோரியுள்ளார்.தாம் கைதாவதற்கு தயாராக இருப்பதாகவும், சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
விஹாரையில் நடைபெற்ற பெரஹராவின் போது கொண்டு வரப்பட்ட யானைகளில் குட்டி யானையொன்றை, அழைத்து வந்தவர்கள் விஹாரiயில் விட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.இந்த விடயம் குறித்து அப்போதைய வினவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சாவிற்கு அறிவித்ததாகவும் யானைக் குட்டி விஹாரையில் இருக்கட்டும் என அமைச்சர் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று தடவைகள் தம்மிடம் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் தாம் தமக்கு தெரிந்த உண்மைகளை கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாய் பூணைகளை எடுத்து வளர்ப்பதனைப் போன்றே இந்த யானையையும் தாம் எடுத்து வளர்த்ததாகத் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் அதற்காக செலவழிக்க பணம் இல்லை எனவும் மக்கள் அனைவரம் 10 ரூபா நன்கொடையாக வழங்க முன்வருமாறும் அவர் கோரியுள்ளார்.