ஆயுள்வேத வைத்தியசாலைகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி !

அபு அலா 

 

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற 63 ஆயுள்வேத வைத்தியசாலைகளின் வைத்தியப் பொறுப்பதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நெறி இன்று (18) திருகோணமலை உப்புவெளி தேசியபாரம்பரிய வைத்திய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

20_Fotor

கிழக்கு மாகாண சுதேச ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்த பயிற்சி நெறியை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். 

இதன் பிரதம வளவாளராக தேசிய பாரம்பரிய வைத்திய பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் டபில்யு.பீ.சிறியானி சந்தநாயக்கவினால் நடாத்திவைக்கப்பட்டது.

இந்தப் பயிற்சி நெறிக்கு அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஆயுள்வேத வைத்திய சாலைகளில் கடமையாற்றும் வைத்திய பொறுப்பதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றினர்.

அங்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறுகையில்,

naseer

கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக தமிழ்மொழி மூலப் பயிற்சி நெறி நடைபெறுவதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இங்கு நடைபெறுகின்ற பயிற்சியின் மூலம் தங்களின் அலுவலக கடமைகளை  மிகச் சரிவர கொண்டு செல்லல் வேண்டும். அதன் மூலம் பொதுமக்கள் பல பயன்களை அடையவேண்டும் என்பதே எமது நல்லாட்சி  அரசாங்கத்தின்  எதிர்பார்ப்பாகும் என்றார்.