தோப்பூர்-நீணாக்கேணி பிரதேச மக்களின் காணிப்பிரச்சனை தீர்க்கப்படும் : இம்ரான் மஹ்ரூப் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

திருகோணமலை தோப்பூர்-நீணாக்கேணி பிரதேசத்திலுள்ள 39 குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் காணி உறுதி பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படுமென திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவர்களின் அழைப்பினை ஏற்று நீணாக்கேணி கிராமத்திற்கு  செவ்வாய் கிழமை வருகை தந்து குறித்த காணியை பார்வையிட்ட பின்னர் பொது மக்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார்.

IMG_1846_Fotor

தோப்பூர் -நீணாக்கேணி கிராமத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணி 2014ஆம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானதென வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் இக் காணியில் தாம் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம்.எங்களது காணியை எங்களுக்கு பெற்றுத் தாருங்கள் என தெரிவித்து இக் கிராமத்திலுள்ள காணிச் சொந்தக்காரர்கள் கடந்த வருடம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தும் எதுவித ஆக்கபூர்வமான பதிலும் காணிச் சொந்தக்காரர்களுக்கு கிடைக்க வில்லை.

இதனால் இக் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணி விடயம் குறித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மகரூப் அவர்களை கடந்த மாதம் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தல் சந்தித்து பேசியுள்ளனர்.இந் நிலையில் இவ் காணி விடயம் தொடர்பாக நேரடியாக குறிப்பிட்ட காணி பிணக்கு உள்ள இடத்திற்குச் சென்று நாம் பார்வையிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் திருகோணமலை அரசாங்க அதிபரிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க குறிப்பிட்ட இடம் அவரால் பார்வையிடப்பட்டு ஏப்பிரல் மாதம் அளவில் காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_1841 (1)_Fotor

 

இதன் போது சேருவில பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.பௌஸி சேருவில பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.பைஸர் ,மூதூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எச்.ஹாஜாமுகைதீன் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.