கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை , சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டது !

project-loon-sri-lanka@2x
கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பலூன், சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கூகுள் நிறுவனம் இலங்கையில் வை-பை இணைய சேவையை வழங்குவதற்காக இலங்கைக்கு மேல் இணைய சேவையை வழங்கும் பலூன் ஒன்றை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக அண்மையில் அனுப்பியிருந்தது.

இந்த பலூன் நேற்றைய தினம் கம்பொல – களுகல பகுதியில் வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகளினால் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியிலேயே இந்த பலூன் உடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது.

“project loon” என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பிக்கப் பட்டன.

இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும்  மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக நேற்று முந்தினம் காலை  இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது  அனைவரும் அறிந்ததே.

விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாயத்திலேயே  நிலை கொண்டிருக்கும் இந்த பலூன் சற்றுமுன்னர் வான் வெளியில் பழுதடைந்து மலையகத்தின் புஸ்சல்லாவ பகுதியில் விழுந்துள்ளதாகவும், எராளமான மக்கள் அதனை காண அங்கு குவிந்துள்ளனர். 

மறுசுழற்சி செய்ய முடியுமான இந்த பலூன்கள் 180 நாட்கள் வரையிலான ஆயுளையே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.