எரிபொருள் விலைகள் உயர்த் தப்பட இருப்ப தாக தெரிவிக்கப் படும் பிரசாரங்க ளில் எதுவித உண்மையும் கிடையாது. அது தொடர்பில் எதுவித பேச்சு வார்த்தையோ முடிவோ எடுக்கப் படவில்லை என மின்சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அரசியல் நோக்கிலே இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சு, கட்டண உயர்வு தொடர்பாக ஐ.ஓ.சி. நிறுவனம் பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப் பிட்டது.
எரிபொருள் விலைகள் சில தினங்களில் அதிகரிக்கப்பட இருப்பதாக வெளிவரும் செய்திகள் தொடர்பில் விளக்கமளித்துள்ள மின்சக்தி எரிசக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
எரிபொருள் விலைகளை நிர்ணயிப்பது தொடர்பில் எமது அமைச்சிற்கு பூரண அதிகாரம் இருக்கிறது. விலை அதிகரிப்பு தொடர்பில் எதுவித பேச்சுவார்த்தையோ முடிவு எடுக்கப்படாத நிலையில் அரசியல் நோக்கிலே சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
மைத்திரி ஆட்சியில் 40 பில்லியன் எரிபொருள் நிவாரணம் வழங்குவதற்குப் பதிலாக 80 பில்லியன் ரூபா எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட்டது.
2014ஆம் ஆண்டில் உலக சந்தையில் எரிபொருள் மற்றும் கேஸ் விலைகள் குறைவடைந்த போதும் தற்பொழுது அதி உயர்வடைந்து வருகிறது. பல வருடங்களாக அரசியல் தேவைகளுக்காக எரிபொருள் துறை பயன்படுத்தப்பட்டதோடு எரிபொருளுக்கு வரிவிதிக்கப்பட்டதால் பாரிய நிதி நெருக்கடிக்கும் முகம்கொடுக்க நேரிட்டது.
2004 முதல் 2014 வரை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 238.85 பில்லியன் நஷ்டமடைந்தது. இக்காலத்தில் 377.87 பில்லியன் வரியாக செலுத்தப்பட்டது. இது தவிர பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா அடங்கலான அரச நிறுவனங்கள் 20 பில்லியன் ரூபா செலுத்த வேண்டும். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டமடைவதற்கு அரசாங்கத்தின் நிதிக் கொள்கையும் காரணமாக அமைந்தது.
எரிபொருளுக்கு விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதமர் உத்தரவு
இதேவேளை, எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உத்தரவிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு குறித்த கமிட்டிக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருட்களுக்கான விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. உலக சந்தை விலை அதிகரிப்பினால் நட்டம் ஏற்படுவதாக இந்தியன் ஒயில் கம்பனி தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றம் குறித்த சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என பிரதமர் கோரியுள்ளார். 100 நாள் திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் எந்தக் காரணத்திற்காகவும் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படக் கூடாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் விலைகளை அதிகரிக்க ஐ.ஓ.சி. கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.