அரசியல் நிகழ்ச்சி நிரலை விட நாட்டின் நிகழ்ச்சி நிரல் முக்கியமானதென்றும் அதிகாரத்திற்காக பிளவுபடுவதா அல்லது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவதா என்பது பற்றி அனைவரும் தீர்மானமெடுக்கும் தருணமிது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, நாடு பிளவுண்டு போனால் அந்த நாடு பேரழிவையே எதிர்நோக்க நேரும் என்றும் தெரிவித்தார். எக்காரணத்திற்காக மக்கள் பிளவுபட்டாலும் அல்லது பிளவுபடுத் தப்பட்டாலும் அது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைவது போல ஏனைய அரசியல் கட்சிகளினது ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஹம்பாந் தோட்டை மாகம்புர ருஹுணு மரபுரிமை அருங்காட்சியகம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வ மாக திறந்து வைக்கப்பட்டது. அதனையடுத்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, மஹிந்த அமரவீர, நந்திமித்ர, ஏக்கநாயக்க உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, சில தேவைகளுக்காக சிலர் சில தர்க்கங்களை முன்வைத்தாலும் நாட்டிலுள்ள அனைத்து மதங்களின் கருத்துக்கள் மற்றும் பல மொழி பேசுபவர்களை ஒன்றிணைத்து இணைந்து செயற்படுவது முக்கியமாகும்.
அனைவரும் இணைந்து நாட்டில் வறுமையிலுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை பழைய கச்சேரி கட்டடம் நவீனமயப்படுத்தப்பட்டு மாகம்புர மரபுரிமை அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது.
நேற்றைய தினம் அதற்கான பெயர்ப்பலகையைத் திரை நீக்கம் செய்து அருங்காட்சியகத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிடுவதற்கான முதலாவது பிரவேச டிக்கற்றை பணம் செலுத்திப் பெற்றுக்கொண்டே அருங்காட்சிய கத்தைப் பார்வையிட்டார். அருங்காட்சி யக சூழல் wi-ஜீi வலயமாக ஜனாதிபதியி னால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது