அஷ்ரப் ஏ சமத்
கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் புதுக்கடைப்பிரதேசத்தில் உள்ள பண்ராநாயக்க மாவத்தையில் பல மில்லியன் பெறுமதி வாய்ந்த கட்டிடங்கள் வைத்திய உபகரணங்கள் உள்ளன. ஆனால் இம் மகப்பேற்று வைத்தியசாலை பண்நெடுங்காளமாக அப்பிரதேசய கர்ப்பிணித் தாய்களுக்கு வைததிய சேவை செய்யாது புறக்கணிக்பபட்டு வருகின்றது. இவ் வைத்தியசாலைய மூடி அக்கட்டிடத்தை வேறு பயண்பாடுகளுக்கு பாவிப்பதற்கு திரை மருவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை கேள்வியுற்ற அமைச்சா் பௌசியும் கொழும்பு மாநகர சபை மேயருமான இன்று(13) அவ் வைத்தியாசாலைக்குச் சென்று உடன் வைத்திய அதிகாரிகளை அழைத்து அதனை மீள இயங்குவதற்கு உடன் நடவடிக்கை எடுத்தாா்கள்
கொழும்பில் தலைநகரில் புதுக் கடை பிரேதேசத்தில் மிகவும் அடா்ததியாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனா். இப்பிரதேச வாழும் கர்ப்பிணித் தாய்மாா்களுக்காக மகப்பேற்று வைத்தியசாலை ஒன்றினை 20 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டது. அது இயங்கி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு இரு வருடங்கலாக இதன் சேவையை மக்கள் பெற்றுக் கொள்ளாது காசல் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டி இருப்பதாகவும் அமைச்சா் பௌசியிடம் பொது மக்கள் முறையிட்டனா். இன்று கொழும்பு மாநகர சபை மேயா் ஏ. ஜே.ஏ. முசம்மிலுடன் சென்று அங்கு சேவையாற்றும் வைத்தியா்கள் தாதியா்கள், ஊழியா்களை அழைத்து இவ் வைத்தியாசலை மீள ஆரம்பிக்குமாறும். இப்பிரதேச கர்பிணித் தாய்மாருக்கு மகப்பேற்று சிகிச்சை முறையை ஆரம்பிக்கும் படி வைத்திய அதிகாரியிடம் பணிப்புரை வழங்கினாா்கள்.
அத்துடன் இவ் வைத்தியசாலைக்குரிய ஊழியா்கள், தாதியா்கள் வைத்தியாகளை சுகாதார அமைச்சரை சந்தித்து பெற்றுத் தருவதாகவும் அங்கு கடமையில் இருந்த வைத்தியா்களிடம் அமைச்சா் பௌசி வாக்குறுதி அளித்தாா்.
அத்துடன் ஹல்ப்சொட், மெல்ட்டன் வீதியின் உள்ள நசீா் சன சமுக நிலையத்தையும் இருவரும் பாா்வையிட்டனா். அதனையும் திருத்தியமைக்கப்பட்டு வருகின்றது. இவ் மண்டபத்தினை இப்பிரதேச மக்கள் திருமண மற்றும் சமுக நல பயண்பாடுகளுக்கு நவீன முறையில் திருத்தியமைத்து அடுத்த மாதம் திறந்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது
. அத்துடன் புதுக்கடை பிரதேச அப்துல் ஹமீட வீதியை காபட் இட்டு வடிகால் நடைபாதை மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கான வியாபரங்களையும் மேற்கொள்வதுக்கும் மேயா் முசம்மில் தமது மாநகர பொறியில் பீடத்தின் பிரதான பொறியியலா் முஹம்மத் சாலிஹினிடம் பணிப்புரை விடுத்தாா்