அக்கரைப்பற்று கல்வி நடவடிக்கைகளில் உள்ளுர் அரசியல் வாதிகளின் தேவையற்ற தலையீடுகள் !

நிஸ்மி

 

அக்கரைப்பற்று பிரதேச கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகளை நிறுத்தக்கோரி ஆளுனரிடம்; கோரிக்கை.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள மத்திய மற்றும் மாகாண பாடசாலைகளின் கல்வி விடயத்தில அண்மைக் காலமாக உள்ளுர் அரசியல் வாதிகளின் தேவையற்ற தலையீடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக கல்வி அபிவிருத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர் காலத்தில் கல்வி அடைவுகளில் வீழ்ச்சி ஏற்படலாம் என அச்சமேற்பட்டுள்ளதால் அதனைத் தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவிடம் கோரிக்கை விடுத்தார் ஆரம்பக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் தயாகமகேயின் இணைப்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அக்கரைப்பற்று மத்திய குழுவின் தலைவரும், அமைப்பாளருமான எம்.எம்.எம்.நிஸாம்.

DSCN4749 (2)_Fotor

 

திருக்கோணமலையிலுள்ள ஆளுஞர் அலுவலகத்தில் நேற்று (08) திங்கட்கிழமை ஆளுனரை சந்தித்த எம்.எம்.எம்.நிஸாம் நல்லாட்சியின் கீழ் நல்லாட்சிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கல்வி நடிவடிக்கைகளில் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் சில உள்ளுர் அரசியல்வாதிகளின்; தேவையற்ற தலையீடுகள் அதிகரித்துள்ளதால் கல்வி நடிவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுளளது என்றும் தேவையில்லாமல் தனது சொந்த அரசியல் காரணங்களுக்காகவும் தனக்கு வேண்டியவர்கள் முதலிய காரணங்களுக்காகவும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்தல், ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை இரண்டாம் தரப் பாடசாலையாக மாற்ற முயற்சித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளினால் கல்வி நடிவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு எதிர் காலத்தில் கல்வி அடைவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கல்வியியலாளர்களும், கல்விச் சமூகமும் கவலையடைந்துள்ளதாகவும் நிஸாம் ஆளுஞருக்கு விளக்கியதோடு;,

 

DSCN4751_Fotor
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் அக்கரைப்பற்று அஸ் – ஸிறாஜ் மஹா வித்தியாலயம் போன்வற்றுக்கான அதிபர் நியமனங்களின்போது தனது உறவினர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் நியமித்ததன் மூலம் இந்த நிலைமை தெளிவாக தெரிவதாகவும் அவர் ஆளுஞரிடம் எடுத்துக் கூறி இதனை உடன் தடுத்து நிறுத்தி சுமூகமானதும் சுதந்தரமானதுமான கல்வி நடிவடிக்கைகளுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்ததோடு இது பற்றிய மகஜர் ஒன்றினையும் நிஸாம் ஆளுஞரிடம் கையளித்தார்.
கல்வி நடிவடிக்கைகளில்; தேவையற்ற அரசியல் தலையீடுகளை தடுப்பதற்கான நடிவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ நிஸாமிடம் உறுதியளித்தார்.
மகஜரின் பிரதிகளை அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அனுப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிஸாம் தெரிவித்தார்.

 
இது சம்பந்தமாக நிஸாம் எமக்கு கருத்துத் தெரிவிக்கையில்: அக்கரைப்பற்று கல்வி சம்பந்தமாக ஆராய்ந்து வரும் கல்வியியலாளர்களும், கல்விச் சமூகமும் அக்கரைப்பற்று கல்வி மேம்பாட்டுக்காக கல்வியியலாளர்களையும் கல்விச் சமூகத்தைச் சேர்ந்த துறைசார் புத்திஜீவிகளையும் அடக்கிந 100 பேர் கொண்ட கல்வி அபிவிருத்திக் குழு ஒன்றினை ஏற்படுத்தி அதன் மூலம் எதிர் காலத்தில் சுதந்திரமான கல்வி மேம்பாட்டுக்கு நவடிக்கை மேற் கொள்ளவுள்ளதாகவும் நிஸாம் தெரிவித்தார்.