மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஆரம்பிப்பாரானால் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும் !

faiser musthafa
அஷ்ரப் ஏ சமத்
முதுகெழும்பு உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவா்கள் எவ்வித தயக்கமுமில்லாமல் 68வது சுதந்திர தினத்தில் தேசிய கீதத்தை தமிழில் ஒழிக்கச் செய்தாா். முன்னாள் ஜனாதிபதிக்கு அந்த சானக்கியம் இருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனா இந்த நாட்டில் வாழும் தமிழ் ்முஸ்லீம் பௌத்த மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட  ஜனாதிபதியவாா்.   
அரசியல் அமைப்பில் தமிழ் மொழி மொழிபெயா்ப்பில் நுாலில் தேசிய கீதம் தமிழில் சிங்கள் வசனங்களின் கருத்துக்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 49வது சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது தமிழில் பாடப்பட்டுள்ளது அதற்காக என்னிடம் அழைப்பிதழும் உண்டு. அதில் தமிழில் கீதம் பாடப்படுவதோடு தமிழில் தேசிய கீதமும் அச்சிடப்பட்டு தரப்பட்டது. 
30 வருடங்கள்  யுத்தம் நடைபெற்ற காலத்திலேயே தமிழிழ் தேசிய கீதம் பாடப்படவில்லை. அக்காலத்தில் முதுகெழும்பு இல்லாத தலைவா்கள் இருந்தாா்கள்.  என அமைச்சா்  பைசா் முஸ்தபா இன்று (9) நாரேகேன்பிட்டியவில் உள்ள  தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின்போதே மேற்கண்ட வாறு தெரிவித்தாா்.
இவ்  ஊடக சந்திப்பில்  மத்திய மாகாண முதலமைச்சா்  திசாநாயக்க மற்றும்  மாகாண அமைச்சா் விக்டா் பிரசன்ன மாகியிருந்தனா்.
அங்கு தொடா்ந்து கருத்து தெரிவித்த அமைச்சா் பைசா் 
இந்த நாட்டில் மாபெரும் கட்சிகள் இரண்டே இரண்டு உள்ளன. ஆனால் ஸ்ரீ.ல.சு.கட்சியை இரண்டாகப் பிளப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சில இனவாதிகள் இணைந்து  இச் செயலைச் செய்கின்றாா்.  ஆனால் ஜ.தே.கட்சி காலத்திலும் இவ்வாறு தான் முன்னாள்  ஜனாதிபதி பிரேமதாச  தலைமையில்  இருந்த ஜ.தே.கட்சியை  காலம் சென்ற அமைச்சா்கள் காமினி திசாநாயக்க, அத்துலத் முதலி  சிலர் அன்று ஜதே கட்சியை பிளவு படுத்தினாா்கள் ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அக் கட்சி முகவரியில் இல்லாமல் உள்ளவாறு தான் எதிா்கட்சியின் இந்த  அணியினா்  செல்வாா்கள்.
முன்னாள் ஜனாதிபதி சிறிமா கட்சியின் தலைமையை சந்திரிக்காவுக்கு வழங்கியினா் சந்திரிக்கா பதவிக்காலம் முடிவடைந்ததும் கௌரவமான முறையில் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினாா்கள்.  அதேபோன்று  மைத்திரிபால சிறிசேனா ஸ்ரீ.ல..சு கட்சியின் செயலாளா் பதவியில் இருந்து கொண்டு தான் பொதுச் செயலாளராக ஜனாதிபதி தோ்தலில் இறங்கினாா்.  அவருக்கு இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களும் இணைந்து வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினாா்கள். அதேபோன்று தான் ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமைப் பதவியை பாரம் எடுக்கும்படியும் நா்டின் தலைவராக வருபவா் தான் ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவா் பதவி  வழங்கப்பட்டது.  அதேபோன்று கௌரவமான முறையில் மைத்திரிக்கு தலைவா் பதவி வழங்கிய மகிந்த ராஜபக்ச் கௌரவமான முறையில் சென்றிருக்க வேண்டும்.  அவருக்கு குருநாகலில்  போட்டியிடுவதற்கும்  மைத்திரிபால சிறிசேன சா்ந்தா்ப்பம் வழங்கினாா். 113 எந்த வொரு கட்சிக்கும் இல்லாமையினால்  இரண்டு கட்சிகளும் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.  இதனை தடுப்பதற்கும் இன ரீதியாக சிந்தனையில் ஸ்ரீ.ல.சு.கட்சியை பிளவுபடுத்தி  மகிந்த ராஜபக்ச புதிய கட்சி ஆரம்பிப்பாரானால் அவா் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். 
ஆனால் மைத்திரிபால சிறிசேனாவுடன் இருக்கும் எந்த வொரு உண்மையான ஸ்ரீ.ல.சு.கட்சியினா் இதனை அனுமதிக்க மாட்டாா்கள்.  இவா்கள் எதிா்வரும் உள்ளுராட்சி தோ்தலிலேயே சிறுகட்சி என்ற ரீதியில் நிராகரிப்பாா்கள்.
உள்ளுராட்சி தோ்தலில் 25 வீதம் பெண்கள் தேசிய பட்டியல் முறையில் தோ்ந்தெடுப்பதற்காக பிரதமா் முன்வைக்கின்ற யோசனை இன்று பாராளுமன்றத்தில் அங்கிகரிக்கப்படும்.  உள்ளுராட்சி தோ்தல் ஜூலை நாடத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்ட எல்லை நிர்ணய பிரச்சினை சம்பந்தமாக 2000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் உள்ளன. 30 வீதம் மாவட்ட முறையும் 70 வீதம் வட்டார முறை அறிிமுகப்படுத்தப்படும். என அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா்