ஸ்ரீலங்காவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ரா-அத் ஹுசைன் இன்று செவ்வாய் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
கடந்த ஆறாம் திகதி ஸ்ரீலங்காவைச் சென்றடைந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று முற்பகல் எதிர்கட்சத் தலைவர் இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார்.
அதனைத் தவிர பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மனித உரிமைகள் பாதுகாத்தல் மற்றும் அதன் மேம்பாட்டிற்காக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்றிருந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தியிருந்தார்.