872 பேரில் 285 பேர் நீரிழிவு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர் : Dr கே.எல்.எம்.நக்பர் !
பைஷல் இஸ்மாயில்
இலங்கையின் 68 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையினால் நடாத்தப்பட்ட நடமாடும் தொற்றாய்நோய் பரிசோதனையின் மூலம் 285 பேர் நீரிழிவு நோய்க்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் இன்று (04) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மதியம் 12.00 மணிவரை இடம்பெற்ற இந்த நடமாடும் சேவைப் பரிசோதனையில் 872 பேர் குறித்த பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டதில் 285 பேர் நீரிழிவு நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவை அட்டாளைச்சேனை பிரதான வீதியினூடாகச் சென்று பிரதேசத்திலுள்ள சகல உள்ளக வீதிகளினூடாகவும் வலம்வந்து இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.