இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கோலாகலமாக இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர தின நிகழ்வு இடம்பெற்றது.
68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பிரதாயபூர்வமாக நிகழ்வில் முதலில் கலந்து கொண்டார்.
இதனை தொடர்ந்து உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அரங்கிற்கு வருகை தந்தார்.
அதனை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுதந்திர தின நிகழ்விற்கு வருகை தந்தார்.
சுதந்திர தின நிகழ்விற்கு தலைமை தாங்கிய, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய கொடியை ஏற்றிவைத்து நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்தார்.
நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுதருவதற்காக போரடிய தேசிய வீரர்கள் மற்றும் படையிருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் 3 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்றைய சுதந்திர தின தேசிய நிகழ்வை முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு மேலும் அலங்கரித்தது.