கல்வி இராஜங்க அமைச்சர் ஓட்டமாவடிக்கு விஜயம் !

அசாஹீம் 

 

05_Fotor

கல்வி அமைச்சினால் அறிவு மைய அபிவிருத்தியை உறுதி செய்து கொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இடை நிலைப் பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடம் நேற்;று (03.02.2016) மாலை திறந்து வைக்கப்பட்டது.

 
கல்லூரியின் முதல்வர் எம்.எல்ஏ.ஜூனைட் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.
கல்வி அமைச்சினால் இருபத்தைந்து மில்லியன் ரூபா நிதியில் கட்டடத்திற்கும் தொழில்நுட்ப பீடத்திற்கான பொருட்கலுக்காக பதினைந்து மில்லியன் ரூபாவுமாக மொத்தம் நாட்பது மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

01_Fotor
இந் நிகழ்வின் போது கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் பொறியல் தொழில் நுட்பத்தில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவனும் உயிரியல் முறைமை தொழில்நுட்பத்தில் மாவட்ட மட்டத்தில் பத்தாவது இடத்தைப் பெற்ற மாணவியும் அதிதிகலாள் கௌரவிக்கப்பட்டனர்.

 

02_Fotor