நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள் !

அஷ்ரப் ஏ சமத், எ.எஸ்.எம் ஜாவித் 
 முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் தினைக்களத்தினால் சுதந்திர தின நிகழ்வு !
madrhana_Fotor_Collage_Fotor
சுதந்திரதினத்தின் இஸ்லாமிய சமய நிகழ்வு மருதானை ஜீம்ஆப்பளிளியில் இடம் பெற்றது.
இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையில் நேற்றுக் (04) காலை கொழும்பு -10, மருதானை ஜூம்ஆம் பள்ளிவாசலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இஷாக் ரஹ்மான், அலிஸாகிர் மௌலானா, மேலமாகான சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி, துருக்கி மற்றும் பலஸ்தீன் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள், மருதானைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள், புத்தி ஜீவிகள், முஸ்லிம் கலாசார அமைச்சினதும். திணைக்களத்தினதும் அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு மௌலவி அல்-ஹாபிழ் முஹமட் அர்ஷாடின் பிராஅத்துடன் ஆரம்பமானது இதன்போது வரவேற்புரையை திணைக்களப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் நிகழ்த்தியதுடன், தலைமை உரையை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் நிகழ்த்தினார். நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும், நாட்டின் நலன்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்குமான விஷேட துஆப் பிரார்த்தனைகளை தமழில் மௌலவி குலாம் முஹமடும், சிங்களத்தில் மௌலவி காரி பைஸலும் நிகழ்த்தினர். இதன்போது ஸைபுல்லா மஹ்துர்ம் குழுவினரால் கஸீதாவும் இசைக்கப்பட்டதுடன் மருதானைப் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் உமர் காமிலின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
அஷ்ரப் ஏ சமத்
1ab_Fotor_Collage_Fotor
கொழும்பு புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியில் உள்ள முஹிதீன் ஜு்ம்ஆப் பள்ளிவாசலில் 68வது சுதந்திர தினம்  சிறப்பாக கொண்டாப்பட்டது. இப்பிரதேசத்தில்  90 வீத முஸ்லிம்களை் பெரும்பான்மையாகக்  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை புதுக்கடை பள்ளிவாசல் சம்மேளனமும் வை.எம்.எம். ஏ நிறுவனமும் இனைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பிணா் பைருஸ் ஹாஜி, கெசல்வத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி. ஜ. ஜயரொட்டி,  இஸ்கானியா அரபிக் கல்லுாாி பிரதி அதிபா் மொலவி எம்.எப்.எம் பருத்  நமது நாடு நமது சொத்து போன்று பொது சொ்த்துக்ள் எவ்வாறு பாவிப்பது என்ற கருத்தில் சிறப்புச் சொற்பொலிவாற்றினாா். 
எம்.எம்.ஜபீர்
IMG_8330_Fotor_Collage_Fotor
  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிய குடியரசின் 68வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.சலீம் தலைமையில் இன்று காலை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பிரதேச செயலகத்திற்கு முன்பாக தேசியக்கொடி ஏற்றி, உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்ததுடன், கலைக்கலாச்சார  நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலக  உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர், பிரதேச செயலக கணக்காளர் எஸ்.ஹூஸைமா, நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். 
 
ரபீக் சராஜ் 

மூதூரில் சிறுவர்கள் இணைந்துகொண்ட சுதந்திர தின கொண்டாட்டங்கள் 

இன்று மூதூரில் சமூக சேவைகளை மிகச்சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் அல்-முபஷ்ஸிறா சமூக அபிவிருத்தி மைய பாலர் பாடசாலை மாணவர்களால் மிகச்சிறப்பாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது 
இந்நிகழ்வு சங்க தலைவர் றபீக் சர்றாஜ் மற்றும் பாலர் பாடசாலை தலைவர் ற.மு.ஹில்மி  , பிரதித் தலைவர் ஆர்.எம்.அக்ரம், முன்னாள் தலைவர் எம்.எம்.நியாஸ் , இனணப்பாளர் தா.ஆசிக்,ஒருங்கினைப்பாளர் எஸ்.சனீம் மற்றும் சங்க அங்கத்தவர்கள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்