திருகோணமலை மாவட்ட விவசாயிகள் நெல்லினை குறைந்த விலையில் விற்பனை; விவசாயிகள் கவலை!

எப்.முபாரக்                   

 

திருகோணமலை மாவட்டத்தில் நெல் அறுவடைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லின் விலை குறைந்த  நிலையில் காணப்படுவதாக விவசாயிகள் கவலை  தெரிவிக்கின்றனர்.                            

FB_IMG_1454155800491

இம்மாவட்டத்தின் கந்தளாய், தம்பலகமம், கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசங்களில் பெரும் போக நெல் அறுவடைகள் சிறந்த விளைச்சலுடன் நடைபெற்று வரும் நிலையில் நெல்லிற்கான சிறந்த விலைகள் இல்லாமையால் நட்டத்திற்கு ஆளாகுவதாகவும் குறைந்த விலையிலேயே நெல்லை கொள்வனவு செய்வதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

இம்மாவட்டத்தில் ஒரு கிலோ நெல் இருபத்தைந்து ரூபாவிற்கு விற்பதனால் தாம் பல்வேறு பொருளாதார கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் முறையிடுகின்றார்கள்.கடந்த அரசாங்கத்தில் ஒரு கிலோ நெல் அறுபது ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் நல்லாட்சியில் மிகக்  குறைந்த நிலையில் நெல்லின் விலை காணப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

 

கந்தளாய் மற்றும் மூதுர் பிரதேசங்களில் நெல்லின் விலை குறைவு காரணமாக விவசாயிகள் விற்பனை செய்யாமல் வீடுகளில் சேமித்து வைத்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.   

 

திருகோணமலை மாவட்டத்தின் விவசாயிகளின் நெல்லின் விலைகள் சம்பந்தமான பிரச்சினைகளை உரிய விவசாய அதிகாரிகள் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.