ஷிரந்தி ராஜபக்ஸவை நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு!

 

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸவை பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Mrs._Shiranthi_Rajapaksa

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக ஷிரந்தி ராஜபக்ஸவை நாளை (01) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் லெஷில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது ஊடக ஆலோசகராக செயற்பட்ட ஒருவருக்கு குறைந்த மதிப்பீட்டில் வீடொன்று பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு குறித்தே ஷிரந்தி ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

கஹதுடுவ பிரதேசத்திலுள்ள குறித்த வீடு ஐந்து இலட்சம் என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அந்த வீட்டின் உண்மை பெறுமதி 55 இலட்சம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.