பள்ளிகளில் கணிணி அறிவியலை அடிப்படை திறனாக கற்பிக்க 4 பில்லியன் டாலர் வழங்க வேண்டும் : ஒபாமா !

அமெரிக்காவில் பொருளாதார சூழ்நிலை மாறிவரும் நிலையில் அங்குள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கணிணி அறிவியலை ஒரு அடிப்படை திறனாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண் குழந்தைகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற தகுதியாக இருக்கும் வகையில் கணிணி அறிவியல் கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக 4 பில்லியன் டாலர் நிதி உதவியை பாராளுமன்றம் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். 

obama
மேலும், புதிய பொருளாதாரத்தில் கணிணி அறிவியல் என்பது ஒரு துணை திறனாக கருதப்பட்டுவிடக் கூடாது. அது அடிப்படை திறனாகவே இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

2015-ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள உயர்நிலை பள்ளிகளில் 15 சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகளிலேயே அட்வான்ஸ் பிளேஸ்டெண்ட் சி.எஸ். கோர்ஸ்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. அதிலும், 22 சதவீத மாணவிகளே அந்த கோர்ஸை படித்துள்ளனர். வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் போட்டிகளை சமாளிக்கவும், சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கணிப்பொறிக் 

கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.