வாழைச்சேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் தொற்றா நோயிலிருந்து பாதுகாப்போம் பாதை யாத்திரை !

அசாஹீம் 
விளையாட்டு துறை அமைச்சினால் ஜனவரி 25ம் திகதி முதல் 30ம் திகதி வரை விளையாட்டு உடல் நல மேம்படுத்தல் வாரம் பிறகடனப்படுத்தப்பட்டு இன்று (28.01.2016) நான்காம் நாள் நிகழ்வு நாடலாவிய ரீதியில் இடம் பெற்றது.

03_Fotor
அதன் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸார் ஏற்பாடு செய்த தொற்றா நோயிலிருந்து பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளிலான விழிப்பணர்வு பாதையாத்திரை இன்று (28.01.2016) வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வழியாக வாழைச்சேனை இந்து கல்லூரி வரை இரண்டு கிலோ மீற்றர் தூரம் சென்றது.

02_Fotor
இந்த விழிப்புணர்வு பாதையாத்திரை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தலைமையில் இடம் பெற்ற போது வாழைச்சேனை பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானஹே, கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் வழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் கிரான் மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவரகள் என பலரும் கலந்து கொண்டனர்.

06_Fotor

09_Fotor