தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தேசிய உடற்பயிற்சி வாரத்தை முன்னிட்டு நிகழ்வு !

-எம்.வை.அமீர் –

 

 விளையாட்டுத்துறை அமைச்சின் முன்மொழிவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் அடிப்படையில் இம்மாதம் 25 ஆம் திகதிமுதல்  30ஆம் திகதிவரை விளையாட்டு உடல்நல மேம்பாட்டு தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.

குறித்த உடற்பயிற்சி வாரத்தில் 28 ஆம் திகதி பாதுகாப்புசேவை மற்றும் தனியார் தொழில்முயற்சி நிறுவனங்களுக்கான தேகாரோக்கியத்தை மேம்படுத்தும் தினமாக பிரகடனப்படுத்தப் பட்டிருந்ததால், தேகாரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சி நிகழ்வுகள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்றது.

1_Fotor

பல்கலைக்கழக உடற்கல்வி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிப் பதிவாளர் எம்.ஐ.நௌபர், பொறியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் மற்றும் கலாநிதி ஏ.றமீஸ் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வில் அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையின் பொது சுகாதாரத்துக்கு பொறுப்பான வைத்தியர் டாக்டர் எம்.ஏ.எம்.முபாரிஸ் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இலங்கையில் தொற்றா நோய்களின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே குறித்த தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்ட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

4_Fotor

5_Fotor

10_Fotor