முன்கூட்டியே ஹோமாகம நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு !

இன்று விசாரிக்கப்படவிருந்த சில வழக்குகள் பிற்போடப்பட்டு, முன்கூட்டியே ஹோமாகம நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 

551042658Untitled-1

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விளக்கமறியலில் வைத்தமையை அடுத்து, ஹோமாகம நீதிமன்றத்தின் முன்னால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. 

ஞானசார தேரரை விளக்கமறியலில் வைப்பின் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி, பிக்குகள் சிலர் ஒன்று கூடியமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து விஷேட பொலிஸ் குழுக்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் வரவழைக்கப்பட்டன. 

மேலும் சிறைச்சாலை பஸ்சை செல்லவிடாமல் தடுத்து, துறவிகள் கூச்சலிட்டபடி, ஞானசார தேரருக்கு பிணை வழங்குமாறும் அவ்வாறு இல்லையாயின் தம்மையும் விளக்கமறியலில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்ததாக தெரியவந்துள்ளது.