ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல் மற்றும் ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டமை போன்ற விடயங்களில் விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த காலங்களில் இலங்கையில் ஊடகங்கள் மீதான தாக்குதலை முன்வைத்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், ஊடக சுதந்திரம் இல்லை என தெரிவித்தும், ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என அராசங்கம் உறுதியளித்திருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், இது வரையிலும் ஒரு சில ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பிலேயே அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து தமது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன், இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி விசாரணை குழுவை நியமித்து, எறிக்கப்பட்ட ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கொலை செய்யப்பட்மை உள்ளிட் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி குறித்த விடயம் தொடர்பில் இது வரையிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்காண நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, குறித்த விடயங்களை வலியுறுத்தி ஊடகவியலாளர்களிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையொன்றும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கையெழுத்தடங்கிய மனு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.