ஓட்டமாவடி சரிப் அலி வித்தியாலயத்தின் முன்வாயலுக்கு பூட்டுப் போடப்பட்டு நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்!

அசாஹீம் 

 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஓட்டமாவடி சரிப் அலி வித்தியாலயத்தின் புலமை பரிசில்பரீட்சைக்க கற்பிப்பதற்கு ஆசிரியர் தேவை என்று கோறி பெற்றோர்கலாள் முன்வாயலுக்கு பூட்டுப் போடப்பட்டு நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் வலய கல்வி பணிப்பாளரின் வாக்குறிதியை அடுத்து திறக்கப்பட்ட சம்பவம் இன்று (22.01.2016) காலை இடம் பெற்றது.

01_Fotor

இங்கு தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு புலமைப் பரிசில் படிப்பிப்பதற்கு தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியர் வழங்கப்பட வேண்டும் என்றும் தற்போது கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்ட ஆசிரியரை மாற்றி புலமை பரிசில் கற்பிக்கக்கூடிய தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியரை நியமித்து தருமாரு கோறி பெற்றோர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு பூட்டுப் போட்டு பாடசாலைக்குள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் உட்செல்ல விடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2-2_Fotor

 

ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் எம்.ஐ. சேகுஅலி மற்றும் வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் பெற்றோர்கலுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் குறித்த பாடசாலைக்கு ஆசிரியர் ஒருவரை இடம் மாற்றி அதற்கு பதிலீடாக பொருத்தமான ஒருவரை நியமித்து தருவதாக கொடுத்த உறுதி மொழியைத் தொடர்ந்து பாடசாலை நுழைவாயில் பெற்றோர்கலாள் திறக்கப்பட்டு பாடசாலை நடை பெற்றது.

17_Fotor

 

ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம் தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை உள்ள பாடசாலையாகும் இங்கு 18 வகுப்புக்கள் உள்ளதுடன் அதிபர் உட்பட இருபது ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.