கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் வேண்கோள்!

சுலைமான் றாபி

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் காணப்படும் பிரதேசங்களில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த உரிய பிரதேச சபைகளும், பொலிஸாரும் நடவடிக்கை  எடுக்க வேண்டுமென பொது மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பிரதான வீதியில் அன்றாடம் அதிகளவான வாகனங்கள் பயணம் செய்வதால் இங்கு சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகள் மூலம் பல்வேறு திடீர் விபத்துச் சம்பவங்கள் ஏற்படுகின்றன.

img1453360348106-1024x576_Fotor

இதேவேளை இப்பிரதான வீதியின் நடுவிலும், இருமருங்கிலும் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் குறிப்பிட்ட மாநகரசபை, பிரதேச சபைகளிடத்தில் முறையான திட்டம் இன்மையால் மாட்டுப்பண்ணை உரிமையாளர்கள்  தங்கள் மாடுகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் அலட்சியத்தன்மையாகக் காணப்படுவதால் இவ்வீதியால் பயணம் செய்யும் பொதுமக்களும், பிரயாணிகளும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.

img1453360436999-1024x576_Fotor

எனவே இவ்விடயம் சம்பந்தமாக கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி சபைகளும், பொலிஸாரும்  முறையான சட்டங்களை அமுல்படுத்துவதோடு இதனை மீறும் பண்ணை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொது மக்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.