வை.எல்.எஸ்.ஹமீட்டின் கோரிக்கையை மாவட்ட நீதிமன்றம் நிராகரிப்பு!

 
 risad hameed
சுஐப் எம் காசிம்
 
 
 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, செயலாளர் நாயகம் எஸ்.சுபைதீன் உட்பட 15 பேர் கொண்ட மசூரா சபை உறுப்பினர்களின் தெரிவை வலிதற்றதாக்குமாறும் கடந்த 17ம் திகதி குருநாகலில் இடம்பெற்ற பேராளர் மாநாட்டை ரத்துச் செய்யுமாறும் 15வது எதிராளியான எஸ்.சுபைதீனை செயலாளர் நாயகமாக இயங்குவதற்கு தடை விதிக்குமாறும் கோரி கட்சியின் முன்னால் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவை வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். 
கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.குணசேகர முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகளுக்கு அறிவித்தலை மட்டும் வழங்கலாம் என நீதிபதி தெரிவித்ததுடன் எதிர்வரும் மார்ச் 23ம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைகள் இடம்பெறும் எனவும் அதற்கிடையில் எதிர்த்தரப்பு வாதங்களை சமர்ப்பிக்க முடியுமென்றார்.  
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மசூரா சபை சார்பில் சட்டத்தரணி அலிசப்ரி நீதிமன்றத்தில் தமது வாதங்களை முன் வைத்தார். நீதிமன்ற முடிவின்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன், இறைவன் எங்கள் பக்கமே உள்ளான் கடந்த சில மாதங்களாக சதிகாரர்கள் மேற்கொண்ட சூழ்ச்சி இன்று முறியடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.