ஷீயாக்களுக்கோ அமைச்சர் றிசாட் பதுர்தீனுக்கோ ஆதரவாக நவமணி செய்திகளை பிரசுரிப்பதானது அதன் ஊடகச் சுதந்திரமே !

Untitled_Fotor

 

தகவல்:-நவமணியின் ஊடகப்பிரிவு

அண்மையில் சமூக வலைத்தளங்களிலும் ஷீயாக்களை படிப்போம் என்ற முகநூலிலும் நவமணி பத்திரிகையானது இலங்கை ஷீயாக்களின் கொள்கையினை பரப்புவதற்கும் அமைச்சர் றிசாட்பதுர்தீனின் அரசியலினை வேறூன்றச் செய்வதற்கும் முக்கிய பங்காற்றிவருவதாக குற்றம் சுமர்த்தப்பட்டிருந்தது. அது அட்டுமல்லாமல் மூத்த ஊடகவியலாளரும் நமணியின் பிரதான ஆசிரியருமான என்.எம்.அமீன் ஹாஜி  ஷீயா கொள்கையினை நவமணி பத்திரிகை இலங்கையில் பரப்பும் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக செயற்பட்டுவருக்கின்றார் என்ற அப்பட்டமான குற்றச்சாட்டினை குறித்த முகநூல் விலாசத்திலிருந்து காணக்கூடியதாவும் இருந்தது. அதற்கு பிற்பாடு நவமணி தனது மறுப்பறிக்கையினை நவமணி பத்திரிகைக்கு சார்பாகவும் அமீன் ஹாஜிக்கு சார்பாகவும் வெளியிட்டிருந்தனை நாம் அறிவோம்.

இவ்வாறான ஈன செயலினை புரிக்கின்றவர்கள் நவமணியின் வளர்சியின்பால் கால்புணர்ச்சி கொண்டதின் பலனாகவே இஸ்லாத்தினை முன்வைத்து இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என நவமணியின் பணிப்பாளர் எம்.டீ.எம்.றிஸ்வி தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த பணிப்பாளர் றிஸ்வி ஈரானை பற்றிய அல்லது ஷீயா கொள்கையினை பற்றிய அல்லது அமைச்சர் றிசாட்பதுர்தீனை பற்றிய செய்திகளை இந்த நாடில் பிரசுரிக்கும் உரிமை நவமணிக்கு இருக்கின்றது என்றும் அது ஊடகத்திற்கு இந்த நல்லாட்சியில் மட்டுமல்லாமல் உலகம் முடியும் வரைக்கும் இருக்கின்ற ஜனநாயக உரிமை எனத் தெரிவித்தார்.

ஷீயாக்களுக்கு எதிரான செய்திகளை மட்டும் பிரசுரிக்கின்ற பொழுது புகழ்ந்து தள்ளுகின்ற இவ்வாறான போலி முகநூலில் கருத்துச் சொல்பவர்கள் ஷீயா கொள்கைக்கு சார்பான கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது மட்டும் நவமணியானது ஷீயாகொள்கையினை பரப்புவதாக குற்றம் சுமத்துகின்றனர். நவமணி ஆரம்பத்தில் எழுச்சிக்குரலாக ஈரான் நாட்டின் உதவியுடன் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்கு மட்டுமல்லாமல் உலக முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வந்த சமயத்தில் இவ்வாறான போலி முகத்திரை போர்த்திய முகநூல் முகவரிகள் எங்கிருந்தார்கள் என்பதுதான் வியப்பான விடயமாக இருக்கின்றது.  அது மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள முக்கியமான முஸ்லிம் அரசியவாதிகள் எல்லாம் ஈரான் இஸ்லாமிய குடியரசுடன் சிறந்த நட்பினை பேனிவருக்கின்றமை வரலாறாகவும் நிகழ்கால சம்பவங்களுமாக இருக்கின்ற நிலையில் இஸ்லாமிய சமூகத்தின் மத்தியிலும் அரசியல் பிரமுகர்களின் மத்தியிலும் நவமணிக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கின்ற நிலையில் சவூதி அராபியாவின் பணத்திற்காக  இலங்கையில் இஸ்லாமிய போதகர்கள் என கூறிக்கொண்டு செயற்படுகின்ற  இவ்வாவாறான போலி முகத்திரையினை கொண்ட இஸ்லாமிய மதவாதிகளினால்தான் இலங்கை முஸ்லிம்களுக்கிடையில் பாரிய பிளவேற்படும் என்பதனை இந்த ஊடக அறிக்கையின் மூலம் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நவமணி பத்திரிகையானது தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது.

முஸ்லிம் நாடுகள் என்று பல நாடுகள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு இலங்கையில் பள்ளிவாயல்களையும், ஒற்றுமையாக வாழுக்கின்ற முஸ்லிம்களுகிடையே பிரிவினைகளையும் ஏற்படுத்திகொள்வதிலேயே முனைப்புகாட்டி வருகின்றமையினை எல்லோரும் காணக்கூடியதாக இருக்கின்றது. மாறாக முஸ்லிம்களின் உரிமைக்குரலுக்காக தனியாக நின்று செயற்பட்டுவருக்கின்ற நவமணி பத்திரிகையினை மேலும் வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதில் குறிப்பிட்ட நாடுகள் கடுகளவேனும் சிந்திக்க தவறிவிட்டன. ஆனால் எழுசிக்குரலானது நவமணியாக மாற்றம் பெற்றதற்குப் பிற்பாடும் ஈரான் இஸ்லாமிய குடியராசானது தனது உதவிகளை நிறுத்திவிடாமல் நவமணி என்ற பத்திரிகை இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்கின்ற ஊடகமாக திகழவேண்டும் என்பதற்காக பல உதவிகளை தொடர்ந்து செய்துவருகின்றமையினை பணிப்பாளர் என்ற வகையில் இங்கு நான் சுட்டிக்காட்டுவது எனது கடமையாகும்.

அதே போன்று முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவென உறுவாக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது அதன் பெரும் தலைவர் காட்டித்தந்த பாதையில் இருந்து முற்றுமுழுதாக திசமாறிக்கொண்டிந்த வேலையில் வடமாகாண முஸ்லிம்களுக்காகவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமைகள், அரசியல் அபிலாசைகள் உரிய முறைப்படி வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின்பால் உறுவாக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசினையும் அதன் தலைமையினையும் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் பயணத்தினை முஸ்லிம்களின்  பத்திரிகை என்ற வகையில் நவமணித்திரிகை கையில் எடுத்துள்ளமையினை இவ்வாறன கண் இருந்தும் குருடர்களாக தான்தோன்றிதனமாக் எழுத முற்படும் முகநுல் முகவரிகள் எழுதிவிட்டு மண்ணிப்பு கோறுவதானது வேடிக்கையிலும் வேடிக்கையாகவே தென்படுகின்றது.

ஷீயாக்களை காஃபிர் எனக்கூறுவதற்கோ நரகவாதிகள் எனக்கூறுவதற்கோ எந்த முஸ்லிமிற்கும் உரிமையில்லை. யாவற்றையும் இறைவன் நன்கறிந்தவாகவே இருக்கின்றான். அதே போன்று நவமணி பத்திரிகையானது அமைச்சர் றிசாச் பதுர்தீனின் காத்திரமான அரசியல் நடவடிக்கைகளை செய்திகளாக பிரசுரிக்கின்றமைக்கு நவமணி பத்திரிகை அமைச்சர் றிசாட்பதுர்தீனின் பத்திரிகை எனக்கூறுவதற்கு எவருக்கும் அருகதையில்லை என்பதனை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக்கொள்வதோடு ஜனநாயக நாட்டில் இயங்குகின்ற முஸ்லிம்களின் உரிமைக்குரல் என்ற வகையில் நவமணியானது தனது பணியினை எத்தன தடைகள் வந்தாலும் அதனை உடைதெரிவதற்கும் தயங்காது என்பதனை அல்லாஹ்வின் உதவியுடன் கூறிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைக்கின்றேன்.

பணிப்பாளர் நவமணி