நிந்தவூர் பிரதேசத்திலுள்ள நீரிழிவு நோயாளர்களுக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கும், இலவச மருத்துவப் பரிசோதனையும்!

 

 

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் 

 

நிந்தவூர் பிரதேசத்தில் நீரிழிவு நோயாளர்களின் தொகை அதிகரித்து வருவதைத் தடுத்து, நிறுத்து முகமாக இப்பிரதேசத்திலுள்ள நோயாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கொன்றும், இலவச மருத்துவப் பரிசோதனையும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம் பெற்றது.

நிந்தவூர் நலன்புரிச் சபையின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வுகள் அதன் தலைவர் எம்.எச்.யாக்கூப் ஹசன் தலைமையில் இடம்பெற்றது.

நிந்தவூர் நலன்புரிச் சபையின் சுகாதாரப் பிரிவின் பொறுப்பாளரும், நீரிழிவு நோய் பற்றிய விசேட மருத்துவ நிபுணருமான டாக்டர்.ஏ.எச்.எம்.திலீப் மபாஸ் சிறப்பு வளவாளராகக் கலந்து கொண்டு, நீரிழிவு நோய் என்றால் என்ன? அது எவ்வாறு உருவாகிறது? அதன் தாக்கங்கள் எவை? இத்தாக்கத்திற்கு உள்ளானவர்கள் இதிலிருந்து எவ்வாறு பாதுகாப்புப் பெறுவது? ஏனையவர்கள் இந்நீரிழிவு நோயிலிருந்து தம்மை எப்படிக் காப்பது போன்ற விளக்கங்களை வழங்கினார்.

IMG_9722_Fotor_Collage_Fotor

மேலும் இந்நிகழ்வில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் திருமதி.சஹிலா இஸ்ஸதீன், வைத்திய அதிகாரி டாக்டர்.எம்.எம்.ஹமாம், டாக்டர்.பைசால் அலியார், தென் கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.நசீர் அஹமட், சுகாதார பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஏ.உமர் அலி, பொது மக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் பங்கு கொண்ட அத்தனை பேரும் இறுதியில் இலவச மருத்துவப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்னர்.