பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இந்தோனேசியா உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: இலங்கை

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் காலை ஜகார்த்தாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இந்தோனேசியா உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. சகல வழிகளிலுமான பயங்கரவாதங்களையும் இலங்கை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜகர்த்தா தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐ.எஸ். அமைப்பின் கூட்டாளி பிரச்சார அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது