சிறைகளில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊர்க்காவற்துறை, பருத்தித்துறையில் உள்ள நீதிபதிகளின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து திருகோணமலை சிறையில் இருந்து 10 பேரும், மன்னார் சிறையில் இருந்து 41 பேரும் விடுதலையாகினர்.
முன்னதாக, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 114 பேர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்த போதிலும் படகுகளை திருப்பித்தர மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இலங்கை சிறைகளில் பெரும்பாலான மீனவர்கள் புதுவை, இராமநாதபுரம், நாகை, காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.