அதிகப்படியான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பது எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது: சீறாஸ் மீராஸாஹிப்..

(வீடியோ).,கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்டையும் இணைத்துகொண்டு கட்சியினை வழிநடாத்தி செல்வதே சிறந்த விடயமாகும்.. புதிய வர்த்தக வானிபத்துறை நிபுணத்துவ ஆலோசகர் டாக்டர் சீறாஸ் மீராஸாஹிப்..

வீடியோ டாக்டர் சிறாஸ் மீராசாஹிபுடனான நேர்காணல்:- youtube.com/watch?v=4_alPjNyhUo

 

கவர் போட்டோ

 

எங்களது செயலாளர் நாயகமான வை.எல்.எஸ்.ஹமீட் எங்களுடைய கட்சியினை தேசியத்திலும் சரி அம்பாறை மாவட்டத்திலும் சரி முக்கிய பரினாமத்திற்கு கொண்டு வருவதற்கு அளப்பெரிய சேவையாற்றியுள்ளார் என்பதனை எவறாலும் மறுக்க முடியாத விடயமாகும். ஆனால் எங்களுக்கான சந்தர்ப்பம் கடந்தகாலங்களில் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். ஏன் என்றால் இம்முறைதான் எங்களுடைய கட்சியானது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு பேசக்கூடிய அளவிலான வாக்குகளைபெற்றுள்ளது. ஆகவே கட்சியின் தலைமையானது செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டையும் இணைத்துக்கொண்டுதான் இக்கட்சியினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது கருத்தாக இருக்கின்ற அதே சந்தர்ப்பத்தில் இக்கட்சிக்குள் இருக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெளியில் விடாமல் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கெளரவத்தினை கொடுத்து அரவணைத்து கட்சியினை வழிநடத்தி செல்ல வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தக இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புவதாக முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வரும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டவரும் அண்மையில் அமைச்சர் றிசாட் பதுர்டீனினால் வர்த்தக வானிபத்துறை அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்ட டாக்கடர் சீறாஸ் மீராஸாஹிபுடனான நேர்காணலின் பொழுது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஹமட் இர்ஸாட்:-கல்முனை மேயராக முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பதவி நீங்கள் அக்கட்சியினை விட்டு விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தீர்கள். அந்த வகையிலே அன்மையில் பதவிகளை தேடி நான் செல்பவனல்ல. பதவிகள்தான் என்னை தேடிவரும் என பாரிய அறிக்கையினை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தீர்கள். தற்பொழுது நிபுணத்து ஆலோசகராக அமைச்சர் றிசாட் பதுர்டீனினால் வர்ததக வானிபதுறை அமைச்சில் நியமிக்கப்பட்டதனை எவ்வாறு கருதுக்கின்றீர்கள்?

சீராஸ் மீராசாஹிப்:- கடந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை மையப்படுத்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முக்கியமாக மூன்று பேர்கள் களமிறக்கியிருந்தோம். முஸ்லிம் காங்கிரசின் கோட்டைக்குள் ஆகக்குறைந்தது ஒரு ஆசனத்தையாவது முதன்முதலாக வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் அம்பாறை மாவட்டத்து மூலை முடுக்கெல்லாம் எமது கட்சியின் சின்னமான மயில் சின்னமானது சிறகை விரித்து ஆடத்தொடங்கியது. தேர்தலில் வாக்களிப்பு வீதத்தின் அடிப்படையில் எங்களால் ஒரு ஆசனத்தினை வென்றெடுக்க கூடிய வாய்ப்பே காணப்பட்டது. தேர்தல் இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரைக்கும் நாங்கள் நம்பிகையுடனே இருந்தோம். தேர்தலில் வாக்களித்த விதத்திலும் எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது. இருந்தும் முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அம்பாறை மாவட்டத்தில் 33000 வாக்குகள் எங்களுடைய கட்சிக்கு கிடைத்தது என்பது அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கும் எங்களுக்கும் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

அந்தவகையிலே அதற்கு பிற்பாடு பதவிகளை தேடிசெல்வதனை எனது தொழிலாக கொள்ளாமல் எனது கொள்கையான பதவிகளே என்னை தேடி வர வேண்டும் என்ற அடிபடையில் எனது சொந்த வேலைகளில் அதிகம் கவணம் செலுத்தியவனாக கடந்த காலங்களை கடத்த வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. இரண்டு மூன்று மாதங்களுக்கு முற்பாடு என்னை குறித்த பதவியினை பெற்றுகொள்ளுமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தும் நான் சற்று தாமதித்து சில விடயங்களை ஆராய வேண்டி ஏற்பட்டதினாலும் எனது வேலைப்பழுவின் காரணமாகவும் நான் பதவிகளில் உற்காருவதில் கவணம் செலுத்தவில்லை. அமைச்சருக்கு எனக்கும் இடையில் ஏற்பட்ட சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகு பிற்பாடு அமைச்சருடன் பேசி எனது நோக்கமான எனது மாவட்டத்து மக்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலேயேதான் குறித்த வர்த்தக வானிபத்துறை அமைச்சில் முக்கிய பதவியாக காணப்படுகின்ற குறித்த பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டேன். அமைச்சர் கூட இப்பதவியினை பொறுப்பெடுக்கும் சமயத்தில் அம்பாறை மாவட்டத்துக்கு எந்த அளவிற்கு குறித்த பதவியினை வைத்து சேவையாற்ற முடியோ அதனை நிறைவேற்றுமாறு என்னை பணித்துள்ளார்.

அஹமட் இர்ஸாட்:-ஏதோ ஒரு வகையில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் அமைச்சர் றிசாட் பதுர்டீனின் அமைச்சுக்கு கீழ் உள்ள திணைக்களங்களில் பெருமதியான பதவிகள் வழங்கப்பட்டுள்ளமையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

சீராஸ் மீராசாஹிப்:- வரலாற்றிலே எவ்வளவோ அதிகாரம் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் அம்பாறை மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தி இருந்தும் இளம் வயதினை உடைய கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் றிசாட் பதுர்டீன் அம்பாறை மாவட்டத்திற்கு அதிகப்படியான முக்கிய பதவிகளை வழங்கியிருப்பதானது அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு வாக்களித்துள்ள மக்களை கெளரவித்துள்ளார் என்பதனை எடுத்துக்காட்டுக்கின்றது. எனக்கு பதவி வழங்கியிருபதனது வேறுவிடம். அதனை நான் அவரிடம் எதிர்பார்க்கவுமில்லை. இவ்வாறு அதிகப்பதவிகளை அம்பாறை மாவட்டத்திற்கு எமது தலைவர் வழங்கியிருப்பதானது சுயலாபங்களுக்கல்லாது அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்கு வாக்களித்த மக்களுக்காக எதனையானது கொடுக்கப்பட்ட பதவிகளை வைத்து செய்ய வேண்டும் என்பதே அமைச்சர் றிசாட்டின் முகிய நோக்கமாகும்.

அஹமட் இர்ஸாட்:-உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய நியமணத்தினை வைத்து அம்பாறை மாவட்டத்து மக்களுக்கு எதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?

சீராஸ் மீராசாஹிப்:- இந்த பதவிக்கான நியமண கடிதத்தினை அமைச்சர் றிசாட் என்னிடம் தருவதற்கு முன்பு வர்த்தக வானிபத்துறை அமைச்சினையும் அமைச்சிற்கு கீழ் இருக்கின்ற தினைக்களங்களையும் வைத்து எதனை அம்பாறை மாவட்டத்து மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியுமோ அதனை பெற்றுக்கொடுக்குமாறு என்னை பனித்தார். அந்தவகையிலே பதவியினை பெற்றுகொண்டு வெறுமனே அந்த நாற்காலியில் உட்காருபவன் நான் அல்ல. மாறாக நான் பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற மக்களின் அபிலாசைகள், அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புக்களை கருத்தில் கொண்டு எனக்கு தற்பொழுது கிடைத்துள்ள பதவியினை வைத்து என்னால் எந்தளவிற்கு இன, மத, மொழி வேறுபாட்டிற்க்கு அப்பால் நின்று சேவையாற்ற முடியுமோ அதனை முதலில் நிறைவேற்றி முடிப்பதே எனது முதன்மைபடுத்தப்பட்ட வேலைத்திட்டமாக கருத்தில் எடுத்து செயற்பட தொடங்கியுள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:-தேசியமானது மிகவிரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிற்கு முககொடுக்க இருக்கின்ற நிலையில் முன்னாள் கல்முனை மேயராக பதவிவகித்த உங்களுக்கு மீண்டும் வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் ஏது என்னங்கள் இருக்கின்றதா?

சீராஸ் மீராசாஹிப்:- பாராளுமன்ற தேர்தலில் கூட அமைச்சர் றிசாட் பதுர்டீன் வேண்டுகோளுக்கு அமைவாகவே தேர்தலில் போட்டியிட்டு எதிரணிக்கு மிகவும் சவாலாக இருந்தோம். வருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை நான் இன்னும் தீர்மாணிக்கவில்லை. ஆனால் வருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் திறமையான மக்கள் செல்வாக்கு உள்ளவர்களை இனம் கண்டு தேர்தலில் போட்டியிடச்செய்து சில உள்ளூராட்சி மன்றங்களையாவது அம்பாறை மாவட்டத்தில் கைப்பற்ற வேண்டும் என எங்களுடைய தலைமையானது கூறியிருக்கின்றது. அதற்காக எமது நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுவருவதுடன் மாவட்டத்திலே அதிகப்படியான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வென்றெடுப்பது எங்களுடைய முக்கிய நோக்கமாக உள்ளது.

அஹமட் இர்ஸாட்:-கல்முனை மாநகர சபைக்குட்ட பிரதேசத்தில் தின்மகழிவுப் பிரச்சனை, மற்றும் நீங்கள் மேயராக இருந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரையினை அண்டிய சிறுவர் பூங்கா, மற்றும் மாநகர சபை ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பிரச்சனைகளைப்பற்றி முன்னாள் மேயர் என்ற வகையில் உங்களுடைய கருத்து என்ன?

சீராஸ் மீராசாஹிப்:- மேயர் எனும் ஆசனத்தில் அமர்கின்றவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினையும் பதவியினையும் சரியாக செய்வாராயின் சகல பிரச்சனைகளுக்கும் அது தீர்வாக அமையும். மாரகர சபையானது மத்திய அரசாங்கத்தினை போன்றோ அல்லது மாகாண சபையினை போன்றோ நினைத்து அக்கதிரையில் உட்கார முடியாது. உள்ளூராட்சி சபை என்பது நாளாந்தம் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய இடமாகவே இருக்க வேண்டும். திண்மகழிவானது மாநகர சபையில் நிதிப்பற்றாகுறை காரணமாக உரிய முறையில் அதனை அகற்ர முடியாத நிலைமை காணப்படுக்கின்றது. இவற்றை வைத்து நான் எவரையும் கூறவில்லை. இருந்தும் கதிரை உட்காருக்கின்றவர்களுடைய ஆளுமையினையும் திறமையினையும் அடிப்படையாக வைத்தே இவ்வாறான பிரச்சனைகளுக்கு உரிய முறையில் தீர்வினை காணமுடியும். மற்றும் எனது காலப்பகுதியில் ஒரு கோடி 65 இலட்சம் ரூபாய்கள் பெருமதிவாய்ந்த சாய்ந்தமருது கடற்கரையோர சிறுவர் பூங்காவினை நெல்சிப் திட்டத்தின் கீழ் பாரிய முயற்சியினை மேற்கொண்டு முதற்கட்டத்தினையும் பூர்த்தி செய்து எனது ஆசனத்தினை தற்போதைய முதல்வரிடம் கையளித்தேன். அதற்கு பிற்பாடு பூச்சாண்டிகாக அது திறக்கப்பட்டு தற்பொழுது மாடுகளினதும் விலங்களினதும் உரைவிடமாக காட்சி தருக்கின்ற விடயமானது மிகவும் மனவேதனைக்குறிய விடயமாக காணப்படுக்கின்றது. அதே போன்று மாநகர சபையில் இருக்கின்ற நிருவாக உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நாளந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முக்கிய காரணமக பார்க்கப்படுவதானது முதல்வர் கதிரையில் உட்காருக்கின்றவர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்தாகும். 

அஹமட் இர்ஸாட்:-உங்களுடைய கட்சியின் தலைவருக்கும் செயலாளர் நாயகத்திற்கும் பல கருத்து முரண்பாடுகள் முத்திய நிலையில் காணப்படுக்கின்ற இந்த காலகட்டத்தில் நீங்கள் தலைவரின் பக்கமா அல்லது செயலாளரின் பக்கமா?

சீராஸ் மீராசாஹிப்:- தலைவரின் பக்கமா அல்லது செயலாளரின் பக்கமா என்பதனை விட யார் பிழைகள் விட்டாலும் பிழை என்றால் யாருக்கும் பயப்படாமல் பிழை எனக் கூறுபவன் நான். என்னை பொறுத்தமட்டில்  சகல கட்சிக்குள்ளும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் எங்களது செயலாளர் நாயகமான வை.எல்.எஸ்.ஹமீட் எங்களுடைய கட்சியினை தேசியத்திலும் சரி அம்பாறை மாவட்டத்திலும் சரி முக்கிய பரினாமத்திற்கு கொண்டு வருவதற்கு அளப்பெரிய சேவையாற்றியுள்ளார் என்பதனை எவறாலும் மறுக்க முடியாத விடயமாகும். ஆனால் எங்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும் ஏன் என்றால் இம்முறைதான் எங்களுடைய கட்சியானது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு பேசக்கூடிய அளவிலான வாக்குகளைபெற்றுள்ளது. ஆகவே கட்சியின் தலைமையானது செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டையும் இணைத்துக்கொண்டுதான் இக்கட்சியினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது எனது கருத்தாக இருக்கின்ற அதேசந்தர்ப்பத்தில் இக்கட்சிக்குள் இருக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வெளியில் விடாமல் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கெளரவத்தினை கொடுத்து அரவணைத்து கட்சியினை வழிநடத்தி செல்ல வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தக இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புக்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:-உங்களுடைய கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டுனான நேற்காணலின் பொழுது புதிய கல்முனை நகரமயமாக்கள் சம்பந்தமான விடயத்திற்கு பிரதேசத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாக தெரிவித்திருந்தார். முன்னாள் மேயர் என்ற வகையில் உங்களுடைய கருத்தென்ன?

சீராஸ் மீராசாஹிப்:- கல்முனை மாநகர சபையினை பொறுத்தமட்டடில் முஸ்லிம்கள் அதிகூடிய வீதத்திலும் தமிழ் சகோதரர்கள் இரண்டாம் நிலையுமாக வாழ்ந்து வருக்கின்றனர். எனது மேயர் காலப்பகுதிக்குள் தமிழ் மக்களுக்கு மாநகர சபையில் இருந்து கிடைக்க வேண்டிய 33வீதத்தினையும் உரிய முறைப்படி பங்கிட்டு கொடுத்திருதேன். அது மட்டுமல்லாமல் மறைந்த மாநகர சபை உறுப்பினர் அமர்தலிங்கம் அவர்கள் என்னோடும் பல தடைவைகள் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தார். ஆனால் நான் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி அதிலிருந்து பல தெளிவுகளை பெற்று அவர்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய பங்கீட்டினை என்னவாக இருந்தாலும் அவர்கள் மனம் சுழிக்க முடியாதளவிற்கு வழக்கியிருந்தேன்.  புதிய நகர மயமாக்கள் திட்டத்தினல் தமிழர்களுடைய நிலப்பரப்புக்கள், எல்லைகள், வியாபார தளங்கள், நெற்காணிகள் எல்லாம் அடித்துச் செல்லப்படும் என்ற பயம் அவர்களின் மனங்களில் ஏற்பட்டுள்ளது. ஆகவே எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி தமிழ் சகோதரர்களை அழைத்து அவர்களுடன் பேசி ஒரு சுமூகமான தீர்விற்கு வரவேண்டும் என்பதே எனது கருத்தாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தமட்டில் தற்பொழுது நகரதிட்டமிடலுக்கு பொறுப்பாக அமைச்சர் றவூப் ஹக்கீம் இருக்கின்றார் அதனோடு சேர்த்து சிறீலங்கா முச்லிம் காங்கிரசிற்கும் தமிழரசு கட்சிக்கும் இடையில் பாரிய உடன்பாடு காணப்படுகின்றபடியினால் புதிய கல்முனை நகரமயமாக்கள் பிரச்சனையானது சுமூகமான முறையில் தீர்க்கப்படலாம் என நினைக்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:-சமூக வலைத்தளங்களில்லு ஊடகங்களிலும் உங்களுடைய கட்சியின் தலைமையானது தேசிய தலைமை எனக் கூறப்பட்டு வருக்கின்றது. ஒரு கல்வி நிறுவனத்தினை பொறுப்புடன் நடாத்தி வருக்கின்ற நீங்கள் தேசிய தலைமை என்ற பதத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

சீராஸ் மீராசாஹிப்:- தேசிய தலைமை என்பதற்கு பல அர்த்தங்கள் கணப்படுக்கின்றன. ஆனால் அரசியல் ரீதியாக பார்க்கின்ற பொழுது ஒவ்வொருதரும் ஒவ்வொரு விதமாக அதற்கான வரைவிலக்கணத்தை கொடுக்கின்றனர். என்னை பொறுத்தமட்டில் இது அரசியல் சார்ந்த விடயமாக கட்சி சார்ந்த விடயமாக இருக்கின்ற படியினால் குறித்த அரசியல் கட்சியானது செல்வாக்கு செலுத்துக்கின்ற பிரதேசத்திற்கு அப்பாற்பட்டு தனது ஆதிக்கத்தினையும் செல்வாக்கினையும் பறந்துபட்ட நிலையில் தேசியத்திலே வியாபித்துகொள்கின்ற பொழுது அதற்காக மக்கள் மத்தியில் அரசியல் ரீதியான ஆதரவும், அங்கீகாரமும் கிடைக்கின்றது. அதனை ஒட்டியதாகவெ கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடு எமது கட்சியானது வடகிழக்கு மாகாணத்திற்கும் அப்பாற்பட்டு தனது செல்வாக்கினையும் மக்கள் சக்தியினையும் அதிகரித்து காட்டியமையினை கட்சியின் தொண்டர்களும், முகியஸ்தர்களும், ஆதரவாளர்களும் எமது கட்சியின் தலைமையினை தேசிய தலைமையாக ஏற்றுக்கொண்டு அழைக்க தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் எமது கட்சியின் தலைமையினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைமை எனக்கூறுவதில் எந்தப்பிழையும் இல்லை என நினைக்கின்றேன்.

kj

அஹமட் இர்ஸாட்:-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், உங்களுடைய கட்சியின் செயலாளர் , பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் சுபைர் போன்றவர்கள் உங்களுடைய கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அறியக்கிடைக்கிடைக்கின்றது. அவ்வாறு அமைத்தால் உக்களுடைய கட்சியானது அவர்களின் கூட்டணியினை  மாவட்டத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றதா? 

சீராஸ் மீராசாஹிப்:- அரசியலில் இவ்வாறு விலகிச்சென்று கூட்டணி அமைத்து குறித்த கட்சிக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதானது சகஜமான விடயமாகும். அரசியலில் ஈடுபடுக்கின்ற பொழுது எதுவும் நடக்கலாம் என்ற எதிர்வு கூறலுடனேயே சகல நடவடிக்கைகளையும் தலைவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். உதாரணத்துக்கு சொல்லபோனால் இந்தநாட்டிலே எவறாலும் அசைகமுடியாத ஜனாதிபதியாக நிகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்சவை இரே இரவிலே இந்த நாட்டு மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள் . அரசியலில் எந்தவொரு செக்கனிலும் எதுவும் நடக்கலாம் என்ற நியதியோடே பயணிக்க வேண்டும். அந்தவகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்குள் சில உட்பிரச்சனைகள் இருக்கின்றன. அப்பிரச்சனைகளை சுமூகமான முறையில் தீர்த்துவைக்கின்ற பொறுப்பு கட்சியின் தலைமைக்கு இருக்கின்றது. நாங்களும் கட்சியின் தலையிடம் இதுசம்பந்தமாக எடுத்துக்கூறியிறுக்கின்றோம். மறுபக்கத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் சரி எங்களுடைய கட்சியும் நாங்களும் மாவடத்தில் எவ்வகையான சவால்களையு எதிர்கொண்டு முகம்கொடுக்க தயாராக இருக்கின்றோம்.

அஹமட் இர்ஸாட்:-உங்களுடைய கட்சியின் தலைமையானது தேசியத்திலே பாரிய பிரச்சனையாக விலப்பத்து பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருக்கின்றது. அதனை எவ்வாறு நீங்கள் நோக்குகின்றீர்கள்?

சீராஸ் மீராசாஹிப்:- இதனை ஒரு இனவாதம் பேசக் கூடிய ஒரு கும்பளினால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சனையாகவே நான் கருதுக்கின்றேன் நேற்றுக்கூட ஐக்கிய உயர்ஸ்தானிகராக பதவி வகித்து பதவியுயர்வு பெற்று செல்லிகின்ற அமரிக்க நாட்டவரை சந்திக்கின்ற நிகழ்வில் நானும் அமைச்சருடன் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் அமைச்சர் றிசாட் பதுர்டீன் கருத்தானது குறித்த பிரச்சனையினை பிரதி நித்த்துவப்படுத்துக்கின்ற சமூகத்திற்கு மத்தியிலும் தேசியத்திலும் கட்சிக்கும் அமைச்சருக்கும் பாரிய அரசியல் ரீதியான பின்னடைவினை ஏற்படுத்தும் வகையில் இனவாதகருத்துக்களை தூண்டிவிடுக்கின்ற நிகழவாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

.அமைச்சர் றிசாட் பதுர்டீன் சிங்கள மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் பரப்புக்கின்ற அதே நேரத்தில் 1990ம் இரவோடிரவாக துரத்தியடிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்து மக்களைபற்றியும் அவர்களுடைய மீள்குடியேற்றம் பற்றியும் இவ்வாறு குற்றம் சுமர்த்துபவர்கள் எதுவிதமான அறிக்கையினையும் விடுவதிலை. இவ்வாறான பாரிய பிரச்சனைகளுக்கு மர்ஹும் பெரும் தலைவர் கூட சாதுரியமாக விடையளித்து சாட்டை அடிகொடுத்த வரலாறுகள் இருக்கின்றன. அந்த வகையிலே எங்களுடைய தலைமையும் தேசிய தலைமை என்பதற்கு அப்பால் சக இனங்களும் சம உரிமையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதனை முன்னெடுத்து செயற்படுக்கின்ற பொழுது எவ்வாறன இனவாதம் பேசக்கூடிய கும்பல்கள் தோன்றி சேறுபூச நினைத்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமையும் அல்லாஹ்வின் உதவியும் அவருக்கு இருக்கின்றது என நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இருக்கின்றோம்