ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

 

 

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

images

2016 மற்றும் 2017ம் ஆண்டிற்காக அந்த நிதித் தொகை வழங்கப்படவுள்ளதாக அந்த திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு கூறியுள்ளார். 

இயற்கை காரணங்களால் ஏற்படுகின்ற நிலமைகளின் போது உணவு பாதுகாப்பை ஏற்படுத்துவது சம்பந்தமாக பங்கெடுப்பதற்கு தயார் என்று அவர் கூறியுள்ளார். 

அத்துடன் கிராமபுர மக்களின் ஊட்டச்சத்து மேம்படுத்தல் மற்றும் கிராம மற்றும் தோட்டப்புர பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.