அனுமதிப்பத்திரம் இன்றி யானைக் குட்டிகளை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் இரகசியப் பொலிஸில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு உடுவே தம்மாலோக தேரருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் நேற்று அவர் சுகவீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் சென்றிருந்த வைத்தியசாலைக்கு இரகசியப் பொலிஸ் குழுவொன்று சென்று வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக நேற்று இரவு வரை காத்திருந்துள்ளனர்.
ஆகவே தேரர் வைத்தியசாலையில் இருக்கும் போது அல்லது வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய பின்னரே அவரிடம் வாக்குமூலம் பெற வேண்டிய நிலை இருந்தது.
வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான யானைக் குட்டியை தேரரின் பெயரிலோ அல்லது விகாரையின் பெயரிலோ பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறாமல் வைத்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக இரகசியப் பொலிசார் வைத்தியசாலைக்கே சென்றுள்ளனர்.