எப்.முபாரக்
திருகோணமலை, தெவனிபியவரப் பகுதியில் இன்று புதன்கிழமை (13)காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான சிறுவன் ஒருவன் உட்பட நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெவனிபியவரப் பகுதியைச் சேர்ந்தவர்களான சாமர மதுசங்க (வயது 03), வை.சுனீதா குமாரி (வயது 25) எம்.எம்.சஞ்சீவ (வயது 32), டபிள்யூ.திலகாவத்தி (வயது 27) ஆகியோரே குளவிக் கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
விஜய பாலர் பாடசாலையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோ
உடனடியாக மஹாதிவுல்வெவ கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.